இந்திய அணியின் துவக்க இடத்திற்கு போட்டி போடும் இன்னொரு இளம் வீரர்! 100 பந்தில் 150 ரன் அடித்து விளாசல்!

நியூசிலாந்து லெவன் அணிக்கெதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பிரித்வி ஷா 100 பந்தில் 150 ரன்கள் விளாசினார்.

இந்தியா ஏ – நியூசிலாந்து லெவன் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா ஏ பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி மயங்க் அகர்வால், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் 100 பந்தில் 150 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 32 ரன்களும், ஷுப்மான் கில் 24 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்களும் எடுத்தனர்.

TAUNTON, ENGLAND – AUGUST 16: Prithvi Shaw of India U19s bats during the 5th Youth ODI match between England U19s and India Under 19s at The Cooper Associates County Ground on August 16, 2017 in Taunton, England. (Photo by Harry Trump/Getty Images)

விஜய் சங்கர் 58 ரன்களும், குருணால் பாண்டியா 33 ரன்களும் அடிக்க இந்தியா ஏ 49.2 ஓவரில் 372 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் 373 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து லெவன் அணி களம் இறங்கியது. ஜேக் பாய்ல் சிறப்பாக விளையாடினார். அவர் 130 ரன்கள் விளாசினார். ஆலன் 65 பந்தில் 87 ரன்கள் அடித்தார்.

India’s Prithvi Shaw during the International A Teams Tri-Series final at The Kia Oval, London. (Photo by Mike Egerton/PA Images via Getty Images)

கேப்டன் மிட்செல், விக்கெட் கீப்பர் க்ளீவர் அதிரடியாக விளையாட நியூசிலாந்து ஏ வெற்றியை நோக்கி சென்றது. மிட்செல் 31 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின் நியூசிலாந்து ஏ அணியால் இலக்கை எட்ட இயலவில்லை. க்ளீவர் ஆட்டமிழக்காமல் 33 பந்தில் 44 ரன்கள் அடித்தாலும் நியூசிலாந்து ஏ அணியால் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்களே சேர்த்து.

இதனால் இந்தியா ஏ 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனேவே முதல் ஆட்டத்திலும் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றிருந்தது.வ்

Sathish Kumar:

This website uses cookies.