மும்பையில் இருந்துகொண்டே சச்சின், கோஹ்லி, ரோகித் செய்யாததை.. செய்துகாட்டிய பிரிதிவி ஷா!
மும்பபையில் இருந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோகித், கோஹ்லி போன்றோர்கள் செய்யாததை செய்து காட்டியுள்ளார் இளம் வீரர் பிரிதிவி ஷா.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை பெற்றுவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பை நகரமே ஸ்தம்பித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் கோஹ்லி மற்றும் ரோகித் இருவருமே மும்பையில் வசித்து வருகின்றனர். இவர்கள் பயிற்சிக்கு திரும்பினாள் மற்றவர்களை விட கூடுதல் கவனத்துடன் தனிமைப்படுத்தப்படுவர் என பிசிசிஐ பொருளாளர் முன்னமே தெரிவித்துள்ளார்.
கொரோனா போன்ற இக்கட்டான சூழலை சமாளித்துவரும் மஹாராஷ்டிராவில், இம்மாத துவக்கத்தில் நிசகரா புயல் வந்தது. அதனால் மேலும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமும் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறது. பிரபலங்கள் பலர் உதவிக்கு வரவேண்டும் என மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், மும்பையில் இருக்கும் முன்னணி வீரர்களான விராட்கோலி மற்றும் ரோகித் இருவரும் உதவிக்கு முன்வராத நிலையில், இளம் வீரரான பிரிதிவி ஷா உதவிக்கு முன் வந்து உதவியிருப்பது பாராட்டுதலை பெற்றுள்ளது.
மும்பையில் இருந்து சுமார் 110 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மண்டவா பகுதியில் உள்ள டோகவாதே கிராமத்தில் உள்ள மக்கள் 2 மாத தொடர் ஊரடங்கால் அன்றாட வாழ்விற்கு அவதிப்பட்டு வந்தனர். இந்த சூழலில் புயலின் தாக்கத்தால் மேலும் பாதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு பிரித்திவி ஷா கிராமத்திலேயே தங்கி உதவி வருகிறார். அந்த ஊரின் கிராம தலைவர் வீட்டில் தங்கி, அரசியல்வாதி மகனுடன் சேர்ந்து வீட்டின் கூரைகள் இல்லாதவர்களுக்கு கூரைகள் அமைக்க, பசியில் வாடுபவர்களுக்கு உணவுகள், கொரோனா பரவாமல் பாதுகாக்க கிராம மக்களுக்கு உரிய உபகரணங்கள் என அனைத்துவித உதவிகளையும் செய்துள்ளார்.
பிரித்திவி ஷா-வின் இந்த உதவி குறித்து அக்கிராமத்தின் தலைவர் மகன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் பாராட்டு மழை பொழிந்துவருகின்றனர். சிறிய வயதில் மிகப்பெரிய மனது எனவும் புகழாரம் சூட்டுகின்றனர்.