அதிரடி வீரர் காயம்!! வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடுவது பெரும் சந்தேகம்!

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பு, ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்றபோது இந்திய இளம் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பிருத்வி ஷாவைத் தூக்கிக்கொண்டு ஓய்வறைக்கு அழைத்துச் சென்றார்கள். பிறகு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஸ்கேன் செய்துபார்த்தபோது தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டெஸ்ட் தொடர் முழுக்க பிருத்வி ஷா-வால் பங்கேற்க முடியாமல் போனது.

An injury had ruled Shaw (19), who has already made his Test debut, out of India A’s ongoing tour to the West Indies.

இதன்பிறகு, சையத் முஷ்டாக் அலி கோப்பை, ஐபிஎல், மும்பை டி20 லீக் ஆகிய போட்டிகளில் விளையாடினார் ரிஷப் பந்த். இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிருத்வி ஷா இடம்பெறுவது சந்தேகம் என அறியப்படுகிறது.

19 வயது பிருத்வி ஷா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியா ஏ அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் மற்ற வீரர்கள் மே.இ. தீவுகளுக்குச் சென்ற நிலையில் அவர் தனக்குப் புதிதாக ஏற்பட்டுள்ள காயத்துக்கு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மே மாதம் நடைபெற்ற மும்பை டி20 லீக் போட்டியில் விளையாடியபோது காயமடைந்தார் பிருத்வி ஷா. இடுப்பில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

SYDNEY, AUSTRALIA – NOVEMBER 30: Prithvi Shaw of India injures his leg following an attempted catch on the boundary during day three of the International Four Day tour match between the Cricket Australia XI and India at Sydney Cricket Ground on November 30, 2018 in Sydney, Australia. (Photo by Cameron Spencer/Getty Images)

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிருத்வி ஷா,  செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நான் இன்னும் 100 சதவிகிதம் உடற்தகுதி அடையவில்லை. காயம் குணமாக இன்னும் எவ்வளவு நாளாகும் எனத் தெரியவில்லை. சிகிச்சைத் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்னும் நேரமுள்ளது. பிஸியோவுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். அதனால் காயத்திலிருந்து எப்போது மீண்டு வருவேன் என இப்போது சொல்லமுடியாது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் வரவுள்ளது. அதற்குத் தயாராவதற்கான முயற்சியில் உள்ளோம் என்று கூறியுள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.