டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இளம் வீரரான ப்ரித்வி ஷா முன்னாள் வீரர் சேவாக்கை நினைவுபடுத்துவதாக முன்னாள் வீரர் க்ரீம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு சில அனுபவ வீரர்களை தவிர பெரும்பாலும் இளம் வீரர்களே மாஸ் காட்டி வருகின்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுப்மன் கில், பெங்களூர் அணியில் தேவ்தட் படிக்கல், டெல்லி அணியில் ப்ரித்வி ஷா என அனைத்து அணியிலும் இளம் வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
அனுபவ வீரர்களை விட இளம் வீரர்களுக்கே இந்த தொடரில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வரும் நிலையில், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் தங்களுக்கு பிடித்த இளம் வீரர்களின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் வீரரான க்ரீம் ஸ்வான், டெல்லி அணியின் இளம் துவக்க வீரரான ப்ரித்வி ஷாவை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
ப்ரித்வி ஷா குறித்து க்ரீம் ஸ்வான் பேசுகையில், “ப்ரித்வி ஷாவின் பேட்டிங் ஸ்டைல் எனக்கு பிடித்துள்ளது, குட்டி சேவாக்கை போன்று ப்ரித்வி ஷா விளையாடி வருகிறார். எனக்கு இந்திய அணியில் மிகவும் பிடித்த வீரரான விரேந்திர சேவாக்கை ப்ரித்வி ஷா நியபகப்படுகிறார். அதே போல் டெல்லி அணியை ஸ்ரேயஸ் ஐயரும் மிக சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்கள் கிடைத்திருப்பது டெல்லி அணியின் மிகப்பெரும் பலம். என்னை பொறுத்தவரையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை முழு பலம் பொருந்திய அணியாக பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.