ப்ரிதீவ் ஷா இந்த நியூசிலாந்து வீரரை பார்த்து கற்று கொள்ள வேண்டும்; வி.வி.எஸ் லக்‌ஷ்மண் அட்வைஸ் !!

ப்ரிதீவ் ஷா இந்த நியூசிலாந்து வீரரை பார்த்து கற்று கொள்ள வேண்டும்; வி.வி.எஸ் லக்‌ஷ்மண் அட்வைஸ்

இந்திய அணியின் இளம் வீரரான ப்ரிதீவ் ஷா, நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சனை பார்த்து பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட கற்று கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ் லக்‌ஷமண் தெரிவித்துள்ளார்.

ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா என இருவரும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் நியூசிலாந்து அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக மாயன்க் அகர்வாலும், ப்ரிதீவ் ஷாவும் விளையாடி வருகின்றனர்.

இதில் மாயன்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ப்ரிதீவ் ஷா மிக மோசமான ஷாட்களை அடித்து அவுட்டாகுவதை வாடிக்கையாக்கி வருவதால் அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சுப்மன் கில்லிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்ந்து வருகின்றன.

ப்ரிதிவ் ஷாவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம், ப்ரிதீவ் ஷாவிற்கு போதிய அவகாசம் கொடுக்கப்படும் என்ற விராட் கோஹ்லி திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் முன்னாள் வீரர்கள் சிலர் ப்ரிதீவ் ஷாவிற்கான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ப்ரித்வி ஷா குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்‌ஷ்மண், ப்ரித்வி ஷா நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனிடம் இருந்து நிறைய கற்று கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ப்ரித்வி ஷா விளையாடுவதில் சந்தேகம்;

பிரித்வி ஷாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் பயிற்சியில் கூட கலந்துகொள்ளவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 29ம் தேதி தொடங்குவதால், அவர் அந்த போட்டியில் ஆடுவது சந்தேகம் என தெரிகிறது. எனவே அடுத்த போட்டியில் ஷுப்மன் கில் ஆடுவதற்கான வாய்ப்புள்ளது.

ஷுப்மன் கில் டெஸ்ட் அணியில் கடந்த சில தொடர்களில் இடம்பெற்றிருந்தாலும் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் அவர் அறிமுகமாவதற்கான வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

Mohamed:

This website uses cookies.