இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் உள்ளிட்ட எந்த போட்டியையும் மே 28-ந்தேதி வரை நடத்த வேண்டாம் என்று கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. அங்கு உயிரிழப்பும் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து இங்கிலாந்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் இங்கிலாந்து கிக்கெட் வாரியமும் கொனோரா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறது.
இதையடுத்து இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் உள்ளிட்ட எந்த போட்டியையும் மே 28-ந்தேதி வரை நடத்த வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது.
கவுண்டி கிரிக்கெட் போட்டி தொடர் 7 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் அதிகரித்த நிலையில் கடந்த 2 நாட்களாக சுமார் 50 பேர் விதம் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி வருகிறது.
நேற்று வரை இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டிருந்தவர்கள் எண்ணிக்கை 223 ஆக இருந்தது. இன்று மேலும் 52 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மதியம் நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்திருந்தது. புதிதாக மத்திய பிரதேச மாநிலத்தில் 4 பேருக்கும், இமாச்சல பிரதேசத்தில் 2 பேருக்கும், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 22 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. அதே நேரத்திலும், மத்திய சுகாதார துறை அறிவிப்பில் 231 பேருக்கு பாதிப்பு இருப்பதாகவும், பாதிக்கப்பட்டிருந்த 22 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்ததன் அடிப்படையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 39 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இன்று மேற்கு வங்கத்தில் 3-வதாக ஒருவருக்கும், நொய்டாவில் மேலும் ஒருவருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 23 பேருக்கும், டெல்லியில் 25 பேருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதற்கிடையே நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.