மைதானத்திற்குள் செருப்பு வீசி எதிர்ப்பை பதிவு செய்த நாம் தமிழர் கட்சியினர்!

ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் சேப்பாக்கம் மைதானத்திற்கு ரசிகர்கள் போல் வந்திருந்த போராட்டக்காரர்கள் காலணியை வீசினர்.

ஐபிஎல் போட்டி சென்னையில் நடத்தப்படுவதை எதிர்த்து இன்று மாலை 4 மணிக்கு மேல், சேப்பாக்கத்தில் தீவிர போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை கைது செய்தும், தடியடி நடத்தியும் போலீஸார் கலைத்தனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடனும், தீவிர சோதனைக்கு பிறகும் ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுப்பப்பட்டனர். மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மைதானத்திற்குள் ரசிகர்கள் போல் வந்திருந்த போராட்டக்காரர்கள் சிலர் தங்கள் காலணி மற்றும் மேலாடையை கழட்டி வீசினர். இதனால் 2 நிமிடம் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மைதானத்திற்குள் போராட்டக்காரர்கள் வீசிய காலணியை கால்பந்து போல் உதைத்து ஜடேஜா விளையாடினார்.

It would be better for #IndianCricket to ban #CSK or their Home Ground #Chepauk for more 10 years it will be best punishment for this Disgusting Work #CSKvKKR #CSKBan #NoIPLTamilNadu #FafduPlessis #SpiritOfGoodness #IPL2018 #VIVOIPL #ipl11 #IPL #PerfectFan @BCCI @ChennaiIPL

போராட்டங்களையும் மீறி ஐபிஎல் போட்டி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. ஏராளமான ரசிகர்கள் அதைக்காண குவிந்துள்ளனர். இதற்கிடையே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர், மைதானத்தில் காலணி வீசியும், ஆடைகளை எறிந்தும் காவிரி விவகாரத்திற்காக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர். அத்துடன் கட்சிக் கொடிகளையும் உள்ளே கொண்டு சென்று காட்டினர். பின்னர் காலணி வீசிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, அப்புறப்படுத்தினர். இதனால் 2 நிமிடங்கள் மட்டும் போட்டி தடைபட்டது.

Political tensions in Tamil Nadu bubbled over during the first innings, when flag-bearing members, supposedly of a fringe political group, flung shoes into the ground from the ‘F Upper’ stand

போராட்டக்காரர்கள் வீசிய காலணி சென்னை அணியை சேர்ந்த ஜடேஜாவின் அருகில் விழுந்தது. அந்த காலணியைக் கண்ட ஜடேஜா, விளையாட்டாக அதை கால்பந்து போல் தட்டி எழுப்பி உதைத்தார். அதற்குள் பந்துகளை எடுத்து வீசும் ஊழியர் ஒருவர் வந்து காலணிகளை எடுத்து சென்றார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவிவருகிறது.

 

Editor:

This website uses cookies.