இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே டிராபி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதியிலிருந்து பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முப்பதுக்கும் மேற்பட்ட அணிகள் விளையாடி வருகிறது.
தற்போது இந்த தொடர் காலிறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. டெல்லி, உத்தரகாண்ட், கர்நாடகா, கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மும்பை, சௌராஷ்டிரா ஆகிய அணிகள் காலிறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
இதில் குஜராத், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் டெல்லி அணி காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தற்போது அரையிறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது. வருகின்ற 11ம் தேதி நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் அணியும், இரண்டாவது போட்டியில் கர்நாடகா மற்றும் மும்பை அணியும் மோதுகிறது.
இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற நாலாவது காலிறுதிப் போட்டியில் மும்பை மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதியது. இதில் மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் மும்பை கேப்டன் பிரித்வி ஷா 185 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெற வைத்திருக்கிறார். பிரித்வி ஷா 123 பந்துகளை எதிர் கொண்டு 185 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 21 பவுண்டரி, 7 சிக்சர் விளாசியுள்ளார்.
இதன்மூலம் தோனி மற்றும் கோலி சாதனையை அசலாடாக செய்துள்ளார். 2005ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக போட்டியில் தோனி 183 குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரைத்தொடர்ந்து 2012ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலி 183 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தற்போது பிரித்வி ஷாவும் இவர்களது சாதனை பட்டியிலில் இணைந்துள்ளார். இதற்காக அனைவரும் பிரித்வி ஷாவை பாராட்டி வருகின்றனர்.