நான்காவது டெஸ்ட் போட்டியில் இதைச்செய்யும் பட்சத்தில்… சச்சினை மிஞ்சிவிடுவார் புஜாரா!

நான்காவது டெஸ்ட் போட்டியில் இதைச்செய்யும் பட்சத்தில்… சச்சினை மிஞ்சிவிடுவார் புஜாரா!

நான்காவது டெஸ்ட் போட்டியின் போது புதிய சாதனை படைக்க காத்திருக்கிறார் இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் சித்தேஸ்வர் புஜாரா.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஆடிவரும் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி மான்டெரா மைதானத்தில் மார்ச் 4ஆம் தேதி துவங்குகிறது. இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் புஜாரா, இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மூன்று போட்டிகளின் முடிவில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். மற்ற நான்கு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது புஜாரா 45 ரன்களை கடந்தால், இந்திய மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது வீரர் என்கிற சாதனையை படைப்பார்.

ஏற்கனவே இந்த சாதனையை முன்னாள் ஜாம்பவான்களான கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத் மற்றும் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர் செய்திருக்கின்றனர். கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை செய்ய தவறி இருக்கிறார்.

நான்காவது டெஸ்ட் போட்டியின் போது புஜாரா இதனை நிகழ்த்தும் பட்சத்தில் சச்சினை மிஞ்சிய வீரர் என்பதோடு மட்டுமல்லாமல் சாதனைப் பட்டியலிலும் இடம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியல்:

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அஷ்வின், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்.

வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை இசாந்த் சர்மா தொடர்ந்து விளையாடினாலும், மூன்றாவது போட்டியில் ஆடிய பும்ரா தனது சொந்த காரணங்களுக்காக நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக முகமது சிராஜ் உள்ளே கொண்டுவர அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதேநேரம் உமேஷ் யாதவ் அணியில் இடம்பெற்று இருப்பதால் அவருக்கும் இடம்கொடுக்க வாய்ப்புகள் இருக்கின்றது. நமது கணிப்பின்படி, சிராஜ் இந்த உத்தேச அணியில் இடம் பிடிக்கிறார்.

Prabhu Soundar:

This website uses cookies.