இந்திய அணிக்கு புதிய ஆல்ரவுண்டர் கிடைச்சாச்சு! கோஹ்லிக்கு இனி ஜாலி!
இந்திய மிடில் ஆர்டர் வரிசையில் புதிய ஆல்ரவுண்டர் கிடைத்துவிட்டது என இவரின் ஆட்டத்திற்கு பிறகு ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக ஆடி வருபவர் செதெஷ்வர் புஜாரா. இவர் இதுவரை இந்திய டெஸ்ட் அணியில் 124 இன்னிங்ஸில் சராசரியாக 49.48 ரன்கள் என 5000-க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார்.
புஜாரா டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இடம்பெற்று வருவதால் மீதமுள்ள நேரங்களில் ரஞ்சி கோப்பையில் 16 பேர் கொண்ட சௌராஷ்டிரா அணியில் விளையாட பிசிசிஐ ஒப்புக்கொண்டது.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான புஜாரா அண்மையில் நடைபெற்ற ரஞ்சி போட்டியில் பந்து வீசி ஏராளமான ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். உத்தரப் பிரதேச அணிக்கு எதிராக சவுராஷ்டிரா அணியில் விளையாடிய புஜாரா வீசிய முதல் ஓவரில் 2 வது பந்திலேயே உ.பி அணியின் மோஹித் ஜங்ராவை 7 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார்.
புஜாரா விக்கெட் வீழ்த்திய வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேட்ஸ்மேன் நிலையில் இருந்து ஆல்ரவுண்டராக மாறிய நாள் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இந்திய டெஸ்ட் அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதற்க்கு புஜாரா முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.