ஜோகனஸ்பெர்க்கில் இன்று துவங்கியுள்ள இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்களாக ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ரஹானேவும், அஷ்வினுக்கு பதிலாக புவனேஷ் குமாரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜோகன்ஸ்பெர்க்கில் இன்று தொடங்கி நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி, 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரர்கள் முரளி விஜய் 8 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 0 ரன்னிலும் அவுட்டானார்கள். கேப்டன் விராட் கோலியும், புஜாராவும் ஆடி வருகின்றனர்.
இதில், மிகவும் பொறுமையாக பேட்டிங் செய்த புஜாரா, தனது முதல் ரன்னை 54-வது பந்தில் தான் எடுத்தார். ஒருகட்டத்தில், தென்னாப்பிரிக்க பவுலர்கள் வெறுத்தே போயினர்.
அடுத்த டிராவிட் என்று கூறுவதை, இன்று மெய்ப்பித்திருக்கிறார் புஜாரா.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேசவ் மகாராஜ் பதிலாக அண்டிலே பெலுக்வாயா சேர்க்கப்பட்டுள்ளார்.
அணிகள் விவரம்
தென் ஆப்பிரிக்கா: டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), டீன் எல்கர், எய்டன் மார்க்ரம், ஹசிம் ஆம்லா, வில்லியர்ஸ், குயிண்டன் டி காக், பிலாண்டர், கேசவ் மகாராஜ், ரபாடா, மோர்கல், நிகிடி, கிறிஸ் மோரிஸ் அண்டிலே பெலுக்வாயா.
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல்,, சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவிசந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா.