குவாலிபைர் 1: சென்னை vs மும்பை முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை!!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் பரபரப்பான லீக் போட்டிகள் முடிவடைந்து முதல் நான்கு இடம் பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளன. முதல் இரண்டு இடங்களில் இருக்கும் மும்பை மற்றும் சென்னை இரு அணிகளும் குவாலிபைர் 1 போட்டியில் மோதுகின்றன.

இதில் வெற்றி பெரும் அணி நேரடியாக பைனலுக்குள் செல்லும். தோல்வியை தழுவும் அணி, மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடித்த டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதும் நாக் அவுட் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் குவாலிபைர் 2 போட்டியில் மோதும். இதில் வெற்றி பெரும் அணி. பைனலில் குவாலிபைர் 1 போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் மோதும்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

மும்பை அணி இன்றைய போட்டியில் ஒரேயொரு மாற்றங்களுடன் களமிறங்குகிறது. கடந்த போட்டியில் ஆடிய நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிச்சேல் மெக்லானகன் வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஜெயந்த் யாதவ் உள்ளே வருகிறார்.

சென்னை அணியும் ஒரேயொரு மாற்றத்தோடு களமிறங்குகிறது. அனைவரும் எதிர்பார்த்த ஒன்றே. காயம் ஏற்பட்டு வெளியேறிய கெதர் ஜாதவ் க்கு பதிலாக முரளி விஜய் களமிறங்குகிறார்.

இன்றைய போட்டியில் ஆடும் இரு அணி வீரர்களின் விவரங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

ஷேன் வாட்சன், முரளி விஜய், பஃப் டூ பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, எம்.எஸ். தோனி (கீப்பர் & கேப்டன்), அம்பதி ராயுடு, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாஹார், இம்ரான் தாஹிர்

Photo by Vipin Pawar / IPL / SPORTZPICS

மும்பை இந்தியன்ஸ் அணி

குவிண்டன் டி காக் (கீப்பர்), ரோகித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, கீரன் பொல்லார்ட், ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹார், ஜஸ்பிரிட் பும்ரா, லசித் மலிங்கா.

Prabhu Soundar:

This website uses cookies.