குவாலிபைர் 1: சென்னை vs மும்பை: மும்பை அணியில் ஆடும் உத்தேச 11 வீரர்கள்!!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் பரபரப்பான லீக் போட்டிகள் முடிவடைந்து முதல் நான்கு இடம் பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளன. முதல் இரண்டு இடங்களில் இருக்கும் மும்பை மற்றும் சென்னை இரு அணிகளும் குவாலிபைர் 1 போட்டியில் மோதுகின்றன.

இதில் வெற்றி பெரும் அணி நேரடியாக பைனலுக்குள் செல்லும். தோல்வியை தழுவும் அணி, மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடித்த டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதும் நாக் அவுட் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் குவாலிபைர் 2 போட்டியில் மோதும். இதில் வெற்றி பெரும் அணி. பைனலில் குவாலிபைர் 1 போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் மோதும்.

முதல் குவாலிபைரில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டியில், மும்பை அணியில் ஆடும் கணிக்கப்பட்ட 11 வீரர்கள் இதோ.

#1 ரோஹித் சர்மா (கேப்டன்),

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கடந்த போட்டியில்அரைசதம் கண்டு நல்ல நிலையில் உள்ளார். சென்னை அணிக்கு எதிராக தனது பங்களிப்பை சரியாக செய்யும் பட்சத்தில் வெற்றிக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#2 குவிண்டன் டி.காக் (விக்கெட் கீப்பர்),

மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான குவிண்டன் டி காக் கடந்த போட்டியை போல் அதிரடியாக விளையாடும் பட்சத்தில் மும்பை அணிக்கு நல்ல துவக்கமாக அமையும்.

#3 சூர்யகுமார் யாதவ்;

சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினால், நடுவரிசையில் அணிக்கு கை கொடுக்கிறார்.

#4 இஷான் கிஷான்;

இளம் வீரரான இஷான் கிஷான் இதுவரை எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. இவர் நன்கு ஆடும் பட்சத்தில் நடுவரிசையில் பலம் சேர்க்கும்.

#5 கீரன் பொலார்டு;

ஆல் ரவுண்டரான கீரன் பொலார்டு கிடைக்கும் வாய்ப்புகளில் சிக்ஸர் மழை பொழிந்து வருகிறார். சென்னை அணிக்கு எதிராக இப்போதும் இவர் சிறப்பாக ஆடுவார். இன்றைய போட்டியிலும் அதற்க்கு பஞ்சம் இருக்காது.

#6 ஹர்திக் பாண்டியா;

ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்துகிறார். 17-20 ஓவர்களில் அணிக்கு ரன்களை மளமளவென உயர்த்தி தந்து பெரிதும் உதவுகிறார்.

#7 க்ரூணல் பாண்டியா;

மற்றுமொரு பாண்டியா சகோதரர் இக்கட்டான சூழலில் விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்துகிறார். இந்த ஆண்டு இன்னும் பேட்டிங் இவருக்கு சரிவர ஆட முடியவில்லை. அதையும் சரி செய்தால் நிச்சயம் அணிக்கு பலமே.

#8 மாயன்க் மார்கண்டே;

சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சிற்கு சற்று கைகொடுக்கும் என்பதால் இன்றைய போட்டியில் இளம் சுழற்பந்து வீச்சாளரான மாயன்க் மார்கண்டேவிற்கு வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

#9 ராகுல் சாஹர்;

இளம் சுழற்பந்து வீச்சாளரான ராகுல் சாஹர் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தால் அது மும்பை அணிக்கு கூடுதல் பலமே.

#10 லசீத் மலிங்கா;

கடந்த போட்டியில் அபாரமாக செயல்பட்ட லசீத் மலிங்கா இன்றைய போட்டியிலும் மாஸ் காட்டுவார் என்பதில் சந்தேகம் இல்லை. நிச்சயம் சென்னை அணிக்கு நெருக்கடியாக இருப்பார்.

#11 ஜஸ்ப்ரிட் பும்ராஹ்;

மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரும் நம்பிக்கையாக விளங்கி வரும் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் இன்றைய போட்டியிலும் எதிரணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார் என தெரிகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.