தியோதர் டிராபிக்கான அணியின் கேப்டனாகிறார் அஸ்வின்…
தியோதர் டிராபிக்கான அணிகளின் கேப்டன்களாக அஸ்வின் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல் டி.20 தொடரின் முதலில் இருந்தே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அஸ்வின், கடந்த இரண்டு வருடங்களாக சென்னை அணி இல்லாததால் புனே அணிக்காக தோனியுடன் ஒன்றாக விளையாடினார்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தொடர் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ள நிலையில், இதற்கான வீரர்கள் ஏலத்தில் இந்த முறை அஸ்வினை கடும் போட்டிக்கு பின் பஞ்சாப் அணி விலை கொடுத்து வாங்கியது. அஸ்வினை எடுத்தே தீர வேண்டும் என்று பஞ்சாப் அணி ஏலத்தில் கடும் சவால் கொடுத்ததால் சென்னை அணியால் அவரை விலைக்கு வாங்க முடியாமல் போனது.
அஸ்வினை கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்த பஞ்சாப் அணி, கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவரையே பஞ்சாப் அணியின் கேப்டனாகவும் நியமித்தது.
இந்நிலையில் அஸ்வினுக்கு கூடுதல் அங்கீகாரமாக தியோதர் டிராபிக்கான அணிகளில் ஒரு அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். INDIA A, INDIA B என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா A அணிக்கு அஸ்வின் கேப்டனாகவும், B அணிக்கு ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடக்க உள்ள இந்த தொடைரில் இரு அணிகளும் விஜய் ஹசாரே டிராபியில் சாம்பியன் பட்டம் வென்ற கர்நாடகா அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்தியா ஏ அணி,
அஸ்வின், ப்ர்தீவ் ஷா, உன்முகுந்த் சந்த், அக்ஸ்தீப் நாத், சுப்மன் கில், ரிக்கி புய், சுர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், க்ரூணல் பாண்டியா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, பாசில் தம்பி, குல்வந்த், அமந்தீப் கரே, ரோஹித் ராயுடூ.
இந்தியா B அணி,
ஸ்ரேயஸ் ஐயர், ருத்ராஜ் கைக்வாட், அபிமன்யூ ஈஸ்வரன், அன்கிட் பவ்னே, மனோஜ் தியாரி, சித்தேஷ் லாத், பாரத், ஜயந்த் யாதவ், ஜடேஜா, ஹனூனா விஹாரி, சித்தார்த் கவுல், கலீல் அஹமத், ஹர்ஷல் பட்டேல், உமேஷ் யாதவ், ரஜத் படிட்டர்.