கடைசி டெஸ்ட் போட்டிக்காக தனியாக பயிற்சி எடுக்கும் அஸ்வின்
ஆஸ்திரேலிய அணியுடனான கடைசி டெஸ்ட் போட்டிக்காக அஸ்வின் தீவிரமாக தயாராகி வருகிறார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4ம் தேதி துவங்குகிறது.
இந்நிலையில் காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், கடைசி டெஸ்ட் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறும் சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமானது என்பதால் அஸ்வினின் பங்களிப்பு இந்திய அணிக்கு நிச்சயம் தேவை என்பதால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தெரிகின்றன.
அஸ்வின் கடைசி போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கும் பட்சத்தில், கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ஜடேஜா நீக்கப்படலாம் அல்லது குழந்தையை பார்ப்பதற்காக நாடு திரும்பியுள்ள ரோஹித் சர்மாவுக்கு பதிலாகவும் அஸ்வின் களமிறக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரவிசந்திர அஸ்வின், ஆஸ்திரேலிய அணியுடனான முதல் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் மிக முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி டெஸ்ட் போட்டிக்கான உத்தேச ஆஸ்திரேலிய அணி;
டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் பின்ச், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்,மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ், மிட்சல் மார்ஷ்,நாதன் லியான், ஷான் மார்ஷ், பட் கம்மின்ஸ், பீட்டர் சிடில், மிட்சல் ஸ்டார்க்,ஜோஷ் ஹேசல்வுட்.
மூன்றாவது போட்டியில் விளையாடிய இந்திய வீரர்கள்;
விராட் கோஹ்லி, அஜிக்னியா ரஹானே, மாயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, சட்டீஸ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.