இந்தியாவுக்கு புதிய ஆல்ரவுண்டர் கிடைச்சாச்சு ! ரஷித் கான் கைகாட்டிய இளம் வீரர் யார் ?
14வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 17 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்த சீசனில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி இருக்கிறது.
இதில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் புள்ளி பட்டியலில் 2 புள்ளிகள் மற்றும் -0.228 நெட் ரன் ரேட் பெற்று 5வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த ஹைதராபாத் அணி பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற 14வது லீக் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் சிறப்பான கம்பேக் கொடுத்திருக்கிறது ஹைதராபாத் அணி. முதல் மூன்று போட்டிகளில் மிடில் ஆர்டர் பிரச்சனையை சந்தித்து வந்த ஹைதராபாத் இந்த போட்டியில் கேன் வில்லியம்சனை எடுத்த அதை சரி செய்தது. ஆனால் தற்போது இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து மொத்தமாக விலகி இருக்கிறார்.
இந்நிலையில், ஹைதராபாத் அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா மும்பைக்கு எதிரான போட்டியில் 1 ஓவர் வீசி 5 ரன்கள் மட்டும் கொடுத்தார். இதையடுத்து பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். இதனால் இவரது பவுலிஙை அனைவரும் பாராட்டி வந்தனர்.
அந்தவகையில் ஹைதராபாத் அணியின் ஸ்பின்னர் ரஷித் கானும் பேசியிருக்கிறார். அப்போது ரஷித் கான் “இவர் எதிர்காலத்தில் இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக வருவார். இந்திய அணிக்காக ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்று தருவார்.அவரிடம் திறமை இருக்கிறது. கடுமையாக உழைத்தால் நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவார்” என்று கூறியுள்ளார்.