இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக இந்த வீரரை வைப்பது முட்டாள்தனம்.. தீப் தாஸ்குப்தா பேட்டி!!

அஜிங்கியா ரஹானே இந்திய அணியில் நிரந்தர கேப்டனாக வைப்பது முட்டாள்தனமான விஷயம் என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தீப் தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்விராட் கோலி இல்லாததால் அஜிங்கியா ரஹானே தலைமையில் இந்திய அணி மிக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது மெல்போர்ன் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் ரஹானே தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை  பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரில் தற்போது இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் ரஹானேவுக்கு பலரும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் ஆக்டிங் கேப்டனாக செயல்படும் ரஹானே இதுவரை தன் தலைமை பொறுப்பேற்ற அனைத்து போட்டிகலிலும் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அதனை நிரூபித்தார்.

இந்திய அணியின் மூன்று விதமான தொடரிலும் கேப்டனாக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். இதனை மாற்ற சொல்லி பல கிரிக்கெட் வல்லுநர்களும் தனது கருத்தைதெரிவித்து வந்தனர்.

ஒருநாள் போட்டித் தொடரில் விராட் கோலியை கேப்டனாகவும், 20 ஓவர் போட்டி தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டனாகவும் மற்றும் டெஸ்ட் போட்டியில் அஜிங்கிய ரஹானேவை கேப்டனாக நியமிக்கும்படி பலர் தனது கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் தீப் தாஸ்குப்தாவிடம் டெஸ்ட் போட்டியின் நிரந்தர கேப்டனாக ரஹானே இருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்ட பொழுது அவ்வாறு செய்வது அனுபவம் இல்லாத மற்றும் முட்டாள்தனமான விஷயம் என்று அவர் பதிலளித்தார் .

இதுபற்றி அவர் இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார், அவருடைய கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளது என்று தனது ஆதரவை தெரிவித்தார். இந்த பேட்டி கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Mohamed:

This website uses cookies.