பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் குறித்து தனது கருத்தை பேசியுள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று விளையாடி வருகிறது.
ஏற்கனவே தொடரை இந்திய அணி இழந்தாலும் 3-வது ஒருநாள் தொடரில் வாஷ் அவுட்டாகாமல் எப்படியாவது வெற்றியை பெற்று இந்திய அணியின் மானத்தை காப்பாற்ற வேண்டும் என்று களத்தில் போராடி வருகிறது.
ராகுல் டிராவிட் குறித்து சோயிப் அக்தர் பேசியது.
உலகக் கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி முதன் முதலில் அயல்நாட்டு தொடரில் விளையாடி வருகிறது, ஆனால் இதில் இந்திய அணி மிக மோசமாக செயல்பட்டதால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சாகிப் அக்தர் தனது கருத்தை பத்திரிக்கையாளர் சந்திப்பில்போது பேசியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, மக்கள் அனைவரும் ராகுல் டிராவிட்டை சிறந்த பயிற்சியாளர் என்று கூறவில்லை என்று நம்புகிறேன், ராகுல் டிராவிட் தற்பொழுது தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும், ரவி சாஸ்திரி போன்ற பயிற்சியாளரின் இடத்தை சரியாக பூர்த்தி செய்வார் என்று ராகுல் டிராவிட் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார், ராகுல் டிராவிட் அப்படி சிறப்பாக செயல்படுவாரா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். தற்பொழுது இந்திய அணியை பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் மற்ற மக்கள் எப்படி நினைப்பார்கள் என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் இந்திய அணி தற்பொழுதும் நல்ல நிலைமையில் தான் உள்ளது,தற்பொழுது ராகுல் டிராவிட் செய்ய வேண்டியது எல்லாம் நிலைமையை புரிந்து அதற்கு ஏற்றார் போல் செயல்பட வேண்டும் என்பதே என்று சோயிப் அக்தர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.