ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. தொடக்க வீரரான மயாங்க் அகர்வால் மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகம் ஆனார். முதல் இன்னிங்சில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இன்று நடைபெற்ற சிட்னி டெஸ்டிலும் 77 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அவர், நாதன் லயன் பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். இரண்டு போட்டியிலும் சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் தவறவிட்டார். இந்நிலையில் தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது அவசியம் என்ற மயாங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இன்றைய முதல்நாள் ஆட்டம் முடிவடைந்த பிறகு மயாங்க் அகர்வால் இதுகுறித்து கூறுகையில் ‘‘மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் போனதால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நான் இந்த தவறை மீண்டும் செய்யாமல் இருந்தால், அது சிறந்த பாடமாக இருக்கும். நாதன் லயன் பந்தை அதிரடியாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒர்க் அவுட் ஆகவில்லை. என்னுடைய விக்கெட்டை இழந்ததற்காக மிகவும் ஏமாற்றமடைந்தேன்’’ என்றார்.
ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டன் யார் என்றால் உடனே சாதனைகளை வைத்து ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங் என்று கூறுவார்கள், ஆனால் அணி உண்மையில் மாற்ற நிலையில் இருந்த போது மார்க் டெய்லர் ஒரு அணியை மிகப்பிரமாதமாக உருவாக்கி அந்த அணியைத்தான் ஸ்டீவ் வாஹ் கையில் கொடுத்தார் என்பது பலரும் அறியாதது.
கேப்டன்சி உத்தி, சிந்தனை, கள வியூகம், அணித்தேர்வு என்று கேப்டன்சி தகுதியை அளவிட ஏகப்பட்ட அளவுகோல்கள் உள்ளன, வெறும் வெற்றிக்கணக்கும் நம்பரும் போதாது, அப்படிப்பார்த்தால் ஆலன் பார்டர், மார்க் டெய்லருக்குப் பிறகு பல அளவுகோல்களில் மைக்கேல் கிளார்க்தான் சிறந்த ஆஸ்திரேலிய கேப்டனாகத் திகழ்வார்.
இந்நிலையில் நெருக்கடியில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி அடுத்து வரும் ஆஷஸ் தொடர் பற்றி இப்போதே நடுங்கத் தொடங்கியுள்ளது.
அந்த அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு எழுதிய பத்தியில் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பை வெகுவாகப் பாராட்டி எழுதியுள்ளார். அதிலிருந்து வந்துள்ள மயங்க் அகர்வால் போன்ற ஒரு அறிமுக வீரர் மெல்போர்னில் செய்ததை எந்த ஒரு ஆஸ்திரேலிய அறிமுக வீரராவது செய்ய முடியுமா? என்று கேட்கிறார்.
“பாக்சிங் டே அன்று ஆஸ்திரேலிய பந்து வீச்சை மயங்க் அகர்வால் கையாண்ட விதத்தைப் பார்த்தேன். அப்போது என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது ‘அறிமுக டெஸ்ட்டில் இவ்வாறு ஆடும் வீரர் நம்மிடம் உள்ளனரா?’ என்பதே அந்த கேள்வி. இந்திய அணி தொடக்க வீரர்களுக்கான நெருக்கடியில் இருந்த போது நேராக வந்து இறங்கி பிரமாதப்படுத்தினார் அகர்வால்.
இவர் தன் முதல் தர கிரிக்கெட்டில் 50 ரன்கள் சராசரி வைத்துள்ளார். இந்திய முதல் தர கிரிக்கெட்டில் தனது ரன் குவிப்பின் மூலம் தன் இடத்தை அவர் சம்பாதித்து வந்துள்ளார். அகர்வால் இந்திய அணியின் 4வது தொடக்க வீரர், விஜய், ராகுல், பிரித்வி ஷா ஆகியோருக்குப் பிறகு அழைக்கப்பட்டுள்ளார். அகர்வாலிடம் நல்ல பேட்டிங் உத்தி உள்ளது, அதுதான் அவருக்கு டெஸ்ட் ரன்களைப் பெற்று தருகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கும் இப்படிப்பட்ட ஒன்று தேவை என்று கருதுகிறேன்.
பிக்பாஷ் டி20 லீகுகள் நம் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன என்பது வழக்கமாக கூறும் ஒரு விட்டெறி கூற்றுதான்.” இவ்வாறு அவர் தன் நீண்ட பத்தியில் ஒரு இடத்தில் மயங்க் அகர்வால், இந்திய உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பு ஆகியவற்றை விதந்தோதியுள்ளார்.வ்