ராகுல் டிராவிட் போன்ற ஒரு பேட்ஸ்மேனை திணறடிப்பது எளிதானது அல்ல. டிராவிட் எப்போதும் பேட்டிங் நுட்பம்கொண்டவராக இருந்தார் மற்றும் அவர் பேட்டிங்கில் வித்தைக்காரர் என்பது தெரிந்ததே. இதற்கிடையில், ராகுல் டிராவிட் டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி அனுபவம் கொண்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் சிக்ஸர்களும் அடித்துள்ளார். மேலும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் அவர் வழிநடத்தி வந்தார்.
டிராவிட், டி20 விளையாட்டின் குறுகிய கால வளர்ச்சியை கண்டு வியப்படைவதாக கூறினார். இதற்கிடையில், முன்னாள் இந்திய கேப்டன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட கடினமான T20 பந்து வீச்சாளர் யார் வெளிப்படுத்தினார். ராகுல் டிராவிட், இலங்கைத் வீரர் லசித் மலிங்கா, தனது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட கடினமான T20 பந்து வீச்சாளர் என்றுகூறினார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 154 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய பிரீமியர் லீக்கில் மலிங்கா அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முன்னணி வீரர் ஆவார்.
மலிங்காவின் இளைய பதிப்பைப் போல பும்ரா ஆவார்.
ராகுல் டிராவிட் பேசும் போது கூறினார் இஎஸ்பிஎன் கிரிக்இன்போ விடம், “நான் எதிர்கொண்டதிலேயே கடினமான டி20 பந்து வீச்சாளர் மலிங்கா தான் என்று நான் நினைக்கிறேன். யார்க்கரை பந்தை இயக்கவும், மெதுவாக வீசி சமயோஜிதமாக செயல்படுவதில் மலிங்காவின் திறனைப் பார்த்தால் நன்றாக இருக்கும். எனவே, மலிங்கா நான் சந்தித்த சிறந்த T20 பந்து வீச்சாளர் என்று நினைக்கிறேன். பும்ரா இப்போது நன்றாக வீசுகிறார், ஆனால், நான் அவரது பந்தை ஆடியதில்லை. அவர் மலிங்காவின் இளைய பதிப்பைப் போலவே இருக்கிறார் “.
இதற்கிடையில், ராகுல் டிராவிட் மேலும் கிறிஸ் கெய்ல் தனது அணியில் அழைக்க விரும்புவதாகவும், அவர் சிறந்த T20 வீரர் என்றும் கூறினார். உண்மையில்,டிராவிட் ஏபி டி வில்லியர்ஸின் சில ஷாட்களை பின்பற்ற விரும்புவதாக கூறினார் .
ராகுல் டிராவிட், “டி வில்லியர்ஸ் ஸ்பின்னர்களை ஆப் சைடு நகர்ந்து லாவகமாக பவுண்டரிக்கு விளாசும் ஷாட்டை நானும் அடிக்க விரும்புகிறேன் . அவர் விளையாடும் ஷாட்டுகளில் சில நம்பமுடியாதவை, நான் அதை என்னவென்று அழைப்பது கூடதெரியவில்லை “.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வென்றதை சிறப்பன வெற்றியாக கருதுகிறார்.