கொல்கத்தா அணி தொடர் தோல்விகளை சந்தித்ததற்கு இந்த ஒரு அணி தான் காரணம்!ராகுல் திரிபாதி

கொல்கத்தா அணி தொடர் தோல்விகளை சந்தித்ததற்கு மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது தான் காரணம்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரு சுற்று நிறைவடைந்த நிலையில் கொல்கத்தா அணி மொத்தமாக 7 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மற்றும் வெற்றி பெற்று மீதமுள்ள ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் அந்த அணி இருக்கிறது.

இந்நிலையில் கொல்கத்தா அணியில் மிக சிறப்பாக விளையாடிய ராகுல் ட்ரிப்பாதி தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.

அணிக்கு என்ன தேவையோ அதை இயான் மோர்கன் அறிந்து நடப்பார்

ராகுல் ட்ரிப்பாதி 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் புனே அணிக்காக மகேந்திரசிங் தோனியுடன் இணைந்து விளையாடினார். புனே அணிகள் மிக சிறப்பாக விளையாடிய ராகுல் 2019ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா அணிக்காக தற்பொழுது விளையாடி வருகிறார்.

கொரோனோ காரணமாக ஐ பி எல் தொடர் பாதியில் நிற்கும் என எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை உடம்பளவில் மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். தற்பொழுது பிட்னஸ் குறித்து அவர் தீவிரம் காட்டி வருவதாக கூறியுள்ளார்.

மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் விளையாடி இதன் பின்னர் தற்போது யோன் மோர்கன் தலைமையின் கீழ் விளையாடி வருவது பற்றி கேட்ட கேள்விக்கு, அவர் மிகச் சிறந்த கேப்டன் என்று கூறியுள்ளார். மேலும் அவருக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார் என்றும் அதற்காக எந்த தயவும் காட்ட மாட்டார் என்றும் கூறியுள்ளார். அண்ணிக்கு என்ன தேவையோ அதை புரிந்து கொண்டு செயல்படுவதில் அவர் ஆற்றல் நிறைந்தவர் என்றும் ராகுல் கூறியுள்ளார். மேலும் முடிவு எப்படிப்பட்டதாக இருந்தாலும் பட்ட முயற்சிக்கு அவர் நிச்சயமாக அடுத்தடுத்த வாய்ப்பை வழங்குவார் என்றும் கூறியுள்ளார்.

மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது பெரிய அளவில் எங்களை பாதித்தது

ஆரம்பத்தில் மும்பை என்னிடம் இறுதியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம் அந்த தோல்வி எங்களது அணியை மிகப்பெரிய அளவில் பாதித்தது என்று தான் கூற வேண்டும். ஒரு தொடரில் நிச்சயமாக மொமெண்டம் மிக அவசியம். நாங்கள் அதை மும்பை அணியிடம் பறிகொடுத்தோம் அதன் காரணமாகவே இரண்டு மூன்று போட்டிகள் தோற்க வேண்டிய போனது என்று கூறினார்.

கொல்கத்தா அணி 5 போட்டிகளில் தோல்வி பெற்றிருந்தாலும் அந்த அணி வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளில் ராகுல் மிக அற்புதமாக விளையாடி இருந்தால் அதனைப் பற்றி கேட்டதற்கு, ஹைதராபாத் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 53 ரன்கள் அடித்தது 32 பந்துகளில் 41 ரன்கள் அடித்தது கணக்கு மனதளவில் மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது என்று கூறியுள்ளார். மேலும் எப்பொழுதும் இது போல் மிக சிறப்பாக விளையாடி அண்ணிக்கு என்ன தேவையோ அதன் படி நிதானத்தை விளையாட தான் எப்பொழுதும் தயார் என்றும் கூறியுள்ளார்.

இந்திய அணிக்காக எப்போது வேண்டுமானாலும் ஆடத் தயார்

மேலும் இந்திய அணியில் நீங்கள் எப்பொழுது வருவீர்கள் அதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு, எப்பொழுது வாய்ப்பு வருகிறதோ அப்பொழுது நான் விளையாட தயார் என்று கூறியுள்ளார். தற்பொழுது இந்திய அணியில் பல இளம் வீரர்கள் மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர். தற்பொழுது வரை உள்ளூர் அணிகளுக்காவும் ஐபிஎல் தொடரிலும் மிக சிறப்பாக விளையாடி வரும் போதே தனது நோக்கம் என்று கூறியுள்ளார். மேலும் எப்பொழுது வாய்ப்பு வருகிறதோ அப்பொழுது இந்திய அணிக்காக விளையாட ஆவலாக உள்ளேன் என்றும் இறுதியாக கூறி முடித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.