விராட் கோலியை முந்தி சாதனை படைத்தார் டி20 கிங் ரெய்னா!!
சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் உத்தர பிரதேச அணியை தமிழக அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. முந்தைய போட்டியில் சதமெடுத்த சுரேஷ் ரெய்னா இன்று 41 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.
இந்த போட்டியில் அபாரமாக ஆடிய ரெய்னா இதுவரை டி20யில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். (ஐ.பி.எல் + உள்ளூர் டி20 + சர்வதேச டி20)
1.சுரேஷ் ரெய்னா – 7114 ரன்கள்
2.விராட் கோலி – 7068 ரன்கள்
3.ரோஹித் சர்மா – 6825 ரன்கள்
தமிழக அணியின் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சவாலான இலக்கை 19.2 ஓவர்களில் அடைந்தது தமிழக அணி. தொடக்க வீரர்களான பரத் சங்கர் 30, வாஷிங்டன் சுந்தர் 33 ரன்கள் எடுக்க, சஞ்சய் யாதவ் 52 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்.