புதிய IPLஐ தொடங்கினார் ராஜ் குந்த்ரா

ராஜ் குந்த்ரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குதாரர். கடந்த 2008 ஆம் ஆண்டு ஐ பி எல் போட்டிகள் தொடங்கிய வருடம் இங்கிலாந்து தொழிலதிபரான அவர் இந்தியாவில் ராஜஸ்தான் அணியுன் பங்குகளை வாங்கினார். ஐபிஎல் ன் முதல் பதிப்பில் ராஜஸ்தான் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆவார் ராஜ் குந்த்ரா. அவர் தற்போது  IPL – INDIAN POKER LEAGUE என்ற ஒரு விளையாட்டுத் தொடரை ஆரம்பித்துள்ளார். அவருடைய பேட்டியின் போது IPL அதாவது இந்தியன் போக்கர் லீக் ஐ பற்றி மட்டுமே கேட்க வேண்டும் என நிபந்தனைகள் விதித்து பேட்டி அளித்தார் . இந்தியன் போக்கர் லீக் பற்றிய கேள்விகளுக்கு மிகவும் ஆர்வத்துடன்  பதிலளித்தார்.

இங்கிலாந்து குடிமகனான அவர், இங்கிலாந்தில் பந்தயம் கட்டுவது மிக பிறபலமானது. ஆனால் இந்தியாவில் பந்தயம் கட்டுவது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டத்தின் படி தண்டனைக்குறிய குற்றமாகும் . இதனால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன் . ஆனால் நாங்கள் தொடங்கிவுள்ள இந்தியன் போக்கர் லீக்கில் வெற்றி பெறும் அணி உலக போக்கர் லீக்கில் இந்தியாவை  பிரதிநிதிபடுத்தி கலந்து கொள்ளும் . அந்த சர்வதேச லீக் உலக கோப்பை வெல்ல நடத்தப்படும்.

இந்தியன் பிரிமியர் லீக்கில்  தன் அணியினறுடனே பந்தயம் (betting) கட்டியதற்காக இந்தியன் பிரிமியர் லீக்கில் கிரிக்கெட் எந்தவித நடைமுறைகள் மற்றும் பரிமாற்றங்களில் இனி எப்போதும் ஈடுபடக்கூடாது என கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை தடை செய்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் . தனது அணியினறுடனே பந்தயம் (betting) கட்டி சில கோடிகளை இழந்துள்ளதாக அவரே ஒப்புகொண்டுள்ளார் .

பின்னர் இந்தியன் போக்கர் லீக் பற்றி அவர் கூறியதாவது :

புதிய ஐபிஎல் – இந்தியன் போக்கர் லீக் முயற்ச்சி இந்தியாவில் சூதாட்டம் மற்றும் பந்தயம்  ஆகியவற்றை ஒழிக்க மற்றும் அதனை அதிகாரப்பூர்வமாக்கும் முயற்ச்சி ஆகும் . இம் முயற்ச்சி சிறிது முரண் பட்டதாகதான் இருக்கும் . எப்படி சூதாட்டமே சூதாட்டத்தை ஒழிக்கும் என பலருக்கும் கேள்வி எழலாம் ஆனால் அது கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும் என அனைவரையும் குழப்பினார் .

ராஜ் குந்த்ரா விளையாட்டை தொழில் முறையாக செய்வதற்க்கு அவர் ஒன்றும் புதிதல்ல. இதற்க்கு முன்னர் பாலிவுட்  நடிகர் சஞ்சை தத் உடன் இனைந்து இந்தியாவில்  Super Fight League என்ற தொழில் முறை தற்காப்புகலை லீக்கை தொடங்கினார் .

இவர் இப்போது தொடங்கியுள்ள  இந்தியன் போக்கர் லீக் சர்வதேச போக்கர் அமைப்பான International Poker Federation ஆல் அங்கிகரிக்க பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவரும் எதேதோ புதிய முயற்ச்சி  செய்து வருகிறார். இம் முயற்ச்சிகள் யாவும்  நாட்டிற்க்கு நன்மைபயக்குமானால் நலம் தான். மேலும் இது போன்ற முயற்ச்சிகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் . அவை சட்டத்திற்க்கு புறம்பானதாகவும் இருக்ககூடாது.

Editor:

This website uses cookies.