பிக்சிங் செய்ய கேப்டனுக்கு அழைப்பு : ஜிம்பாப்வே நாட்டின் ராஜன் நாயருக்கு 20 ஆண்டுகள் தடை
ஜிம்பாப்வே நாட்டின் தலைநகரான ஹராரே மாகாணத்தின் கிரிக்கெட் அகாடமியில் மேலாளராக இருந்து வருபவர் ராஜன் நாயர். இவர் தற்போது 2038ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் தொடர்பான செய்கைகளில் ஈடுபட சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கீரேமரிடம் போட்டிகளை பிக்சிங் செய்ய பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியை வெளியில் கூறி சம்பவத்தை அம்பலப்படுத்தி உள்ளார் கீரேமர்.
இதனால் இந்த விசாரணையை நடத்திய ஐசிசி தற்போது ராஜன் நாயர் சம்பவம் தொடர்பாக தீர்ப்பளித்து உள்ளாது.
போட்டிகளை சக வீரர்களுடன் சேர்ந்து பிக்சிங் செய்தால், 30,000 அமெரிக்க டாலர்கள் தருவதாக கூறி பேசியுள்ளார் ராஜன் நாயர். இதனை கேட்டு அதிர்ந்து போன கேப்டன் கீம் கிரேமர் பிரச்சனையை உடனடியாக ஜிம்பாப்வே கிர்க்கெட் வாரியம் மற்றும் ஐசிசி தரப்பில் புகார் கொடுத்துள்ளார்.
தற்போது 2018 முதல் 2038 வரை எந்த கிரிக்கெட் தொடர்பான செய்கைகளிலும் ராஜன் நாயர் ஈடுபட கூடாது என தடை செய்துள்ளது.