மீண்டும் ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 13வது சீசனுக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் சென்ற இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட், இரண்டு தொடர்களிலும் சரிவர செயல்படவில்லை.
சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை கைப்பற்றினால், அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வந்தார். இதனால் அணி நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருந்தது. இதன் காரணமாக, அவரை அணியில் இருந்து வெளியேற்றி ஏலத்திற்கு அனுமதித்தது.
இந்நிலையில், இவரின் ஆரம்ப விலையாக 1 கோடி ருபாய் இருந்தது. இவரை எடுக்க டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதலில் போட்டியிட்டது. பின்னர் கொல்கத்தா அணியும் முயற்சித்து கைவிட்டது.
இறுதியாக, ராஜஸ்தான் அணி 3.00 கோடி ரூபாய்க்கு உனட்கட் மீண்டும் ராஜஸ்தான் அணியால் எடுக்கப்பட்டார். சென்ற ஆண்டு இவர் 7 கோடி ரூபாய்க்கு மேல் எடுக்கப்பட்டார். இம்முறை வெறும் 3 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணிக்கு கிடைத்தது சிறந்த ஒன்றே.