ராஜஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் திஷாந்த் யாக்னிக் ஜார்கண்ட் போட்டிக்கு பிறகு அவரது 14-வருட கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார்.
நெருக்கடியில் இருந்த திஷாந்த் யாக்னிக் இந்த சீசனின் முதல் போட்டி முடிந்ததும் ஓய்வு பெறப்போவதாக தெரிவித்தார்.
“ஜம்மு & காஷ்மீருக்கு எதிரான போட்டிக்கு பிறகு நான் ஓய்வு பெறலாம் என்று முடிவெடுத்தேன். தேர்வாளர்களிடம் இதை சொல்லிவிட்டேன், தற்போது நடந்து கொண்டிருக்கு போட்டியே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கலாம்,” என யாக்னிக் கூறினார்.
தேர்வாளர்கள் அவரை தொடர்ந்து விளையாட சொல்லி கேட்டார்கள், ஆனால் அதை பற்றி அவர் நினைக்க மாட்டார் என்று தெரிகிறது.
“விளையாட எனக்கு எந்த ஊக்கமும் இல்லை. 34 வயதிலும் தினமும் மைதானத்திற்கு சென்று விளையாட முடியாது. இதனால், ஜூனியர்களுக்கு வழி விட விரும்புகிறேன்,” என யாக்னிக் தெரிவித்தார்.
ரஞ்சி கோப்பை பி பிரிவில் ராஜ்கோட் மைதானத்தில் நடந்த ஜார்கண்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 34 ரன் அடித்து அவுட் ஆனார் திஷாந்த் யாக்னிக்.
ராஜஸ்தான் கிரிக்கெட்டுக்கு பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார் திஷாந்த் யாக்னிக். பல பிரச்சனைகளில் இருந்தாலும், ராஜஸ்தான் அணிக்காக தொடர்ந்து விளையாடினார். 2002-இல் சர்வீசஸ் அணிக்கு எதிராக அறிமுகம் ஆன அவர் 14 வருடங்களில் 46 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் அணிக்காகவும் அவர் விளையாடி இருக்கிறார். 2011 முதல் 2014 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் விளையாடி இருக்கிறார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் பயிற்சியாளர் ஆக விருப்பப்படுகிறார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யாக்னிக்.