டக் அவுட்டானதால் 4 முறை கன்னத்தில் அறைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர்… பரபரப்பை கிளப்பிய ராஸ் டெய்லர் !!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிறுவனர் என் முகத்தில் நான்கு முறை அறைந்தார் என்று ராஸ் டைலர் குற்றம் சாட்டியுள்ளார்.

நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் நியூசிலாந்து அணிக்காக மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

2006 முதல் நியூசிலாந்து அணிக்காக மூன்று விதமான தொடரிலும் சேர்த்து 300 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ராஸ் டைலர், தான் விளையாடிய காலங்களில் நியூசிலாந்து அணியின் நம்பிக்கை கூறிய வீரராக திகழ்ந்துள்ளார்.

 

கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த ராஸ் டைலர், கிரிக்கெட் வாழ்க்கை நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை வெளிப்படையாக பேசி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நிறவெறி குறித்து பேசிய ராஸ் டைலர்,தற்போது ஐபிஎல் தொடரில் தனக்கு நடந்த அவமானகரமான சம்பவம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

 

இதுகுறித்து ராஸ் டைலர் பேசுகையில்,“நீங்கள் புது அணியில் விளையாடினால் அங்கு நமக்கு ஆதரவாக இருப்பவர்களை எதிர்பார்க்க முடியாது, அந்த அணியில் நாம் சகஜமாக இருப்பது கொஞ்சம் கடினமான ஒன்றாகும், ஏனென்றால் அந்த அணியில் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் மோசமாக செயல்பட்டால், மொத்த அணியும் நம்மை கண்காணிக்க ஆரம்பித்து விடும். நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய போது நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நாங்கள் பேட்டிங்ஸ் செய்தோம், அந்த போட்டியில் நான் LBW என்ற முறையில் டக் அவுட் ஆனேன், அப்போது லிஸ் ஹார்லி, ஷேன் வார்னே உட்பட அணியில் இருக்கும் பணியாளர்களும் நிர்வாகிகளும் நாங்கள் இருந்த ஹோட்டலின் பாரில் இருந்தனர். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிறுவனர்களில் ஒருவர்,நீ டக் அவுட் ஆவதற்காக உனக்கு மில்லியன் டாலர் கொடுக்கவில்லை,என்று கூறி என் முகத்தில் 3அல்லது 4 முறை என் கன்னத்தில் அறைந்துவிட்டு சிரித்தார் ,அவர் பலமாக அடிக்கவில்லை,ஆனால் அது விளையாட்டாக அடித்தது போல் இல்லை,அந்த சூழ்நிலையில் அதை நான் ஒரு சம்பவாமக ஆக்கவில்லை,ஆனால் இதுபோன்று விளையாட்டு நிறுவனங்களில் நடக்குமா என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை” என்று ராஸ் டைலர் பேசியிருந்தார்.

ராஸ் டைலரின் இந்த பேட்டி கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.