வீடியோ: ஹே புடி.. புடி.. புடி ; ஒரு கேட்ச்சை பிடிக்க போட்டி போட்ட மூன்று ராஜஸ்தான் வீரர்கள் ; சிரிப்பாய் சிரிக்கும் ரசிகர்கள் !! – மீம்ஸ் டெம்ப்ளேட்டாக மாறீட்டிங்களேடா!

குஜராத் பேட்ஸ்மேன் சகா கொடுத்த கேட்சை எடுப்பதற்கு மூன்று ராஜஸ்தான் வீரர்கள் ஓடி வந்து கடைசியில் பவுலரே அதைப்பிடித்த நகைச்சுவை சம்பவம் போட்டியில் நிகழ்ந்துள்ளது. இதன் வீடியோவை கீழே பார்ப்போம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிவரும் லீக் போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் மற்றும் விருதிமன் சகா இருவரும் ஓபனிங் செய்தனர். சற்று தடுமாற்றத்துடன் விளையாடி வந்த விருதிமன் சாகா, டிரன் போல்ட் வீசிய பந்தை அடிக்க முயற்சித்த போது, அடித்த பந்து துரதிஷ்டவசமாக மேலே சென்றது.

இதைப் பிடிப்பதற்கு கீப்பர் சஞ்சு சாம்சன், சிம்ரன் ஹிட்மையர் மற்றும் சில ராஜஸ்தான் வீரர்கள் ஓடி வந்தனர். அனைவரும இந்த கேட்ச்சை கோட்டை விட்டனர். கடைசியில் சாம்சன் கையில் பட்டு மீண்டும் உயரம் சென்ற அந்த பந்தை பவுலர் டிரெண்ட் போல்ட்  அதிர்ஷ்டவசமாக பிடித்து அவுட் ஆக்கினார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நகைப்பூட்டிக்கு வருகிறது.

ராஜஸ்தான் வீரர்கள் செய்த சிரிப்பு சம்பவம், கடைசியில் பவுலிங் போட்டவரே கேட்ச் எடுத்த அதிஷ்டமான வீடியோ:

அதன் பிறகு சுப்மன் கில் அபாரமாக விளையாடி வந்தார். 34 பந்துகளில் 45 ரன்கள் அடித்திருந்தபோது, சந்திப் சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். டேவிட் மில்லர் இரண்டு சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகள் உட்பட 46 ரன்கள் அடித்து நன்றாக விளையாடிக் கொடுத்தார். இன்னும் பெரிய ஸ்கொர் அடிப்பார் என பார்த்திருந்தபோது, கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

ஹார்திக் பாண்டியா 19 பந்துகளில் 28 ரன்கள் அடித்து வெளியேறினார். மிடில் ஆர்டரில் களமிறங்கி சிறிய கேமியோ வெளிப்படுத்திய அபிநவ் மனோகர் 3 சிக்ஸர்கள் அடித்து 13 பந்துகளில் 27 ரன்களுக்கு அவுட் ஆனார்.

20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய சந்திப் சர்மா 25 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். போல்ட், ஜாம்பா மற்றும் சகல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

Mohamed:

This website uses cookies.