ஐபிஎல் தொடரின் 53வது போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட டெல்லி அணியும், வாழ்வா? சாவா? என போராடிக்கொண்டு இருக்கும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேட்டிங் தேர்வு செய்தார்.
புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து நேரடியாக பைனலுக்கு செல்லும் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என களமிறங்குகிறது டெல்லி அணி.
அதேபோல், இன்றைய போட்டியில் வெற்றியை பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என களமிறங்குகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இந்த போட்டியில் பரபரப்பு நிலவும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.
இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்களின் விவரங்கள்
ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் இரு மாற்றங்களுடன் ஆடுகிறது. கேப்டன் ஸ்மித் ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால், மீண்டும் ரஹானே கேப்டன் பொறுப்பேற்கிறார். ஸ்மித் மற்றும் உனட்கட் வெளியில் அமர்த்தப்பட்டு, இஷ் சோதி மற்றும் க்ரிஷ்ணப்பா கௌதம் இன்றைய போட்டியில் ஆடுகின்றனர்.
Photo by Saikat Das /SPORTZPICS for IPL
டெல்லி அணியில் ஜெகதீசா சுசீத் மற்றும் கிரிஷ் மோரிஸ் வெளியில் அமர்த்தப்பட்டு, அவர்களுக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா மற்றும் கீமோ பால் இருவரும் உள்ளே வருகின்றனர்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி
ப்ரீத்வி ஷா, ஷிகார் தவான், ஷ்ரியாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), கொலின் இங்ராம், ஷெர்பேன் ரூதர்போர்ட், கீமோ பால், அக்ஸார் படேல், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, ட்ரெண்ட் போல்ட்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், அஜிங்கியா ரஹனே (கேப்டன்), ரியான் பராக், ஸ்டூவர்ட் பின்னி, மஹிபல் லோம்ரோர், கிருஷ்ணப்பா கவுதம், ஷீயாஸ் கோபால், இஷ் சோதி, வருண் ஆரோன், ஓஷேன் தாமஸ்