வீடியோ: இந்திய வீரர் வீசிய பந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.. இப்படியெல்லாமா பந்து ஸ்விங் ஆகும்?

இந்தியா ஏ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ராஜ்னீஷ் குர்பானி வீசிய பந்து, விக்கெட் கீப்பர் கருண் நாயர் மட்டும் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்தியா ஏ மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி வீரர்கள் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியை இங்கிலாந்தின் சோமர்செட் மைதானத்தில் ஆடிவருகின்றனர். இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி முதல் இன்னிங்சில் 302 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. சமர் ப்ரூக்ஸ் அதிகபட்சமாக 102 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் சிராஜ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்ததாக பேட்டிங் செய்யவந்த இந்திய ஏ அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப முதல் இன்னிங்ஸில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கருண் நாயர் 42 ரன்களும், பௌனே 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும் இருந்தனர்.

அடுத்த இன்னிங்க்ஸை துவங்கிய வேஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. ஜான் காம்பெல் 43 ரன்களுடனும், ப்ளாக்வுட் 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ச்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ராஜனீஷ் குர்பானி வீசிய 34வது ஓவரின் 5வது பந்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் சமர் ப்ரூக்ஸ் ஆடமுடியாமல் விட்டுவிட்டார். பந்து இடது ஸ்டம்ப் நோக்கி வரும் என கணித்து தடுக்க முயற்சி செய்தார்.

ஆனால், வெளிப்புற ஸ்விங் ஆகி வலது ஸ்டம்ப் வெளியே வெளியேற இவரால் ஆடமுடியாமல் போனது. மேலும் பந்து பேட்ஸ்மேன் ஐ கடந்த பிறகு மேலும் ஸ்விங் ஆகி முதல் ஸ்லிப் வரை போக, விக்கெட் கீப்பர் கருண் நாயரை தடுமாற செய்தது. இப்படியான பந்துக்கு ஜாப்பா வகை பந்து என பெயரிட்டுள்ளனர்.

வீடியோ:

Vignesh G:

This website uses cookies.