சென்னை அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர் ராஜ்வர்தன் ஹங்கேர்கர் வயது மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதிற்குட்பட்ட உலக கோப்பை தொடரில் இந்திய அணி யாஸ்துல் தலைமையில் வெற்றி பெற்று சாதனை படைத்தது, இதனால் வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், அதில் செயல்பட்ட வீரர்களுக்கும் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் வெகுவான பாராட்டும், பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக 19 வயதிற்குட்பட்ட உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் நடந்து முடிந்த 2022 ஐபிஎல் ஏலத்தில் நல்ல விலைக்கு ஒப்பந்தமானார், அதில் இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ராஜ்வரதன் கடுமையான போட்டிக்கு பின் சென்னை அணிக்காக ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் ராஜவர்தன் வயசு மோசடி செய்துவிட்டதாக அந்த மாநிலத்தின் ஐஏஎஸ் ஆபீஸர் மற்றும் நிர்வாகிகள் மாநில கிரிக்கெட் அசோசயேசன் மற்றும் பிசிசிஐக்கு தகுந்த ஆதாரத்துடன் தகவல் அனுப்பியுள்ளார்.
அதில், ராஜவர்தனின் தற்போதைய வயது 21 ஆகும், இவர் பிறந்த வருடம் ஜனவரி 10,2001. ஆனால் தான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது இந்த பிறந்த தேதியை மாற்றி நவம்பர் 10, 2002 என்று மோசடி செய்துள்ளார். இதனால் 19 வயதிற்குட்பட்ட உலக கோப்பை தொடரில் 21 வயதாகும் ராஜவர்தன் விளையாட நேர்ந்தது.
இப்படி வயசு மோசடி செய்ததால் இவர் பிசிசிஐயால் தண்டிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறைந்தபட்சம் ஐபிஎல் தொடரிலிருந்தாவது நீக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன் இதேபோன்று வயசு மோசடி செய்த காஷ்மீரை சேர்ந்த ராசிக் என்ற வீரரை பிசிசிஐ இரண்டு வருடம் விளையாட கூடாது என இடைநீக்கம் செய்திருந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் 2019ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட இவர் விளையாட முடியாமல் போனது, தடை முடிந்து மீண்டும் விளையாட திரும்பிய இவர் 2022 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.