இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் தேர்வு
இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் ராமன் கடந்த மார்ச்சு மாதம் வரை இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். அவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பணி பிசிசிஐ முன்னெடுத்து நடத்தியது.
35 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இறுதியாக ரமேஷ் பவார் இந்திய மகளிர் அணிக்கு மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் தலைமை பயிற்சியாளரான ரமேஷ் பவார்
இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பு ஏற்க முன் வந்து 35 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைமை ஆலோசகர் மதன்லால் முந்நிலையில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் இறுதியாக 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் நான்கு ஆண்கள் 4 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களைப் பொருத்தவரையில் ராமன், முன்னாள் பயிற்சியாளர் ரமேஷ் பவார், முன்னாள் வீரர்கள் அஜய் ரத்ரா, ஹருஷிகேஷ் கனிட்கர்வேரே ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பெண்களைப் பொறுத்தவரையில் மம்தா, தேவிகா வித்யா, முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஹேமலதா கலா, சுமன் ஷர்மா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 8 பேரும் இறுதி வரை முன்னேறினார்.
வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இறுதியாக நடத்தப்பட்ட தேர்வில் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரமேஷ் பவார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு முன் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவார்
2018 ஆம் ஆண்டு ரமேஷ் பவார் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவர் தலைமை பயிற்சியாளராக இருந்த பொழுது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக 14 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இருப்பினும் 2018 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது. இதன் காரணமாகவே அவரை பொறுப்பில் இருந்து நீக்கினர்.
ஆனால் தற்போது மீண்டும் அவர் மகளிர் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ராமன் தொடர்ந்து பயிற்சியாளராக நீட்டிக்க படாததற்கு முக்கிய காரணம் அவர் தொடர் சர்ச்சையில் சிக்கி வந்தது என்று பலரும் கூறுகின்றனர். இந்திய கேப்டன் மிதாலி ராஜ் உடன் அவர் சண்டையிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் காரணமாகவே புதிய பயிற்சியாளரை இந்திய கிரிக்கெட் போட்டி தேர்வு செய்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
ரமேஷ் பவார் நிச்சயமாக 2018 ஆம் ஆண்டு நீக்கப்பட்டு இருந்திருக்கக் கூடாது என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவர் தற்போது வரை இந்திய மகளிர் அணிக்கு பயிற்சியாளராக இருந்திருந்தால் இந்திய அணி இன்னும் பல்வேறு சாதனைகளை புரிந்து இருக்கும் என்றும் கூறுகின்றனர். ரமேஷ் பவார் மகாராஷ்டிரா அணிக்கு பயிற்சியாளராக இருந்து விஜய் ஹசாரே டிராபி தொடரில் அணியை வெற்றி பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரமேஷ் பவார் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.