ராகுல் டிராவிட்டை தொடர்ந்து இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் நியமனம்! ரசிர்கள் குதூகளம்!

இந்திய ஏ அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரமேஷ் பவார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக இந்திய ‘ஏ’ அணியின் மொத்த பயிற்சியாளர் வேலையையும் ராகுல் டிராவிட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு மட்டும் ரமேஷ் பவார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ஆகஸ்ட் – செப்டம்பரில் தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணியுடன் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கு மட்டும் ரமேஷ் பவார், பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ரமேஷ் பவார், இந்திய அணிக்காக இரு டெஸ்டுகள், 31 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஜூலை 2018-ல் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

மகளிர் உலகக் கோப்பை டி20 அரையிறுதியில் மிதாலி ராஜ் சேர்க்கப்படாத நிலையில் அவருக்கும், பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் பவாரின் பதவிக் காலம் முடிந்ததால், இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக தமிழக வீரர் டபிள்யு வி.ராமன் நியமிக்கப்பட்டார். தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி இந்தியா வந்து ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அப்போது இவர் பயிற்சியாளராக பொறுப்பேற்பார்.

முன்னதாக, வெஸ்ட் இண்டீசில் சமீபத்தில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னை பலமுறை அவமதித்து உதாசீனப்படுத்தியதாகவும், இதனால் மனம் உடைந்து கண்ணீர் சிந்தியதாகவும் மூத்த வீராங்கனை மிதாலிராஜ் பரபரப்பான புகார்களை தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் தன்னை வேண்டுமென்றே அவர் நீக்கியதாகவும் கூறினார்.

இதனால் சிக்கலுக்குள்ளான பயிற்சியாளர் ரமேஷ் பவார் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரிம் (கிரிக்கெட் ஆபரேட்டிங்) ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது தொழில்முறை ரீதியாக எங்களுக்கு இடையே நெருக்கமான உறவு இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். மிதாலிராஜ் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருந்ததால் அவரை கையாளுவது கடினமாக இருந்தது என்றும் பவார் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் தெரிவித்தார்

Sathish Kumar:

This website uses cookies.