பாகிஸ்தான் அணிக்கு ராகுல் ட்ராவிட் பயிற்சியாளராக வேண்டும் : முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்

பாகிஸ்தான் இளையோர் கிரிக்கெட் அணிக்கு ராகுல் டிராவிட் போன்ற பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா.

Gaurav Kalra and Raunak Kapoor discuss the road ahead for Rahul Dravid, who will continue in his role as the coach of India A and Under-19 teams for the next two years

இவர் தற்போது ராகுல் டிராவிட் போன்ற பயிற்சியாளர் பாகிஸ்தான் இளையோர் கிரிக்கெட் அணிக்கு தேவை என தெரிவித்துள்ளார்.

Chasing 227 to win and claim the series 3-1, the Under-19 team managed a tie against England in the fifth and final ODI match. Dravid said such close games will certainly help the young generation…
India Under-19 coach Rahul Dravid has said that best message he can give his players heading for the World Cup in Bangladesh is to take it as a stepping stone on their journey towards the nationa

அணியின் வெற்றியை எதிர்நோக்கும் அதேவேளையில் இளம் வீரர்களின் திறமையை மேம்படுத்தும் பயிற்சியையும் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இளம் வீரர்களிடம் இருக்கும் திறமையை நாம் அடையாளம் காண வேண்டும் அவர்களுக்கு  தேவையான பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கி அவர்கள் எதிர்காலத்தில் பிரகாசிக்க நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியா கொடுத்து வைத்துள்ளது. அவர்கள் ராகுல் டிராவிட் போன்ற பயிற்சியாளரை நியமித்துள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். இளம்வீரர்களுக்கு டிராவிட் போன்று ஒரு ஆசிரியரும் ஒரு வழிக்காட்டியும் கிடைத்தால் அவர்கள் சிறந்த மனிதர்களாகவும், சிறந்த வீரராகவும் திகழ்வர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 16 மற்றும் 19 வயதுக்குட்பட்டவர்களில் சிறந்த வீரர்களை அடையாளம் காண்பது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Editor:

This website uses cookies.