இந்திய அணியின் இடது கை நட்சத்திர வீரர் கவுதம் கம்பிர் இந்த வருட ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடி வருகிறார். A பிரிவு போட்டியில் கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் 237 பந்துகளை சந்தித்த கவுதம் கம்பிர் 135* ரன் அடித்து அவுட் ஆகாமல் இருக்கிறார். அதில் 20 பவுண்டரி அடித்து அசத்தினார்.
இஷாந்த் சர்மா தலைமையில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்கவீரர் கவுதம் கம்பிர் சிறப்பாக விளையாடி வருகிறார். மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் டெல்லி அணி 84 ஓவரில் 277 ரன் அடித்திருந்தது. கடைசியில் 52 பந்துகளை எதிர்கொண்ட மிலிந்த் குமார் 10 ரன் அடித்து அவுட் ஆகாமல் இருக்கிறார்.
கர்நாடக அணிக்கு ஸ்டுவர்ட் பின்னி சிறப்பாக பந்து வீசினார். 13 ஓவர் வீசியதற்கு பிறகு 39 விட்டுக்கொடுத்த ஸ்டுவர்ட் பின்னி 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
D பிரிவில் நடந்த போட்டியில் தர்மசாலா மைதானத்தில் ஹிமாச்சல் பிரதேசத்தை இன்னிங்ஸ் மற்றும் 114 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சட்டிஸ்கர்.
A பிரிவில், 66 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழந்து 229 ரன் சேர்த்திருக்கிறது உத்தரபிரதேசம் அணி. அந்த அணியின் தொடக்கவீரர் உமங் சர்மா சிறப்பாக விளையாடி சதம் அடித்து, தற்போது 131 ரன்னில் அவுட் ஆகாமல் இருக்கிறார்.
சிறப்பாக விளையாடி கொண்டிருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா அந்த ஸ்கோரை பெரிய ஸ்கோராக மாற்றுவதற்குள் அவுட் ஆகிவிட்டார். 77 பந்துகளை எதிர்கொண்ட சுரேஷ் ரெய்னா 33 ரன் அடித்து அவுட் ஆகிவிட்டார்.
A பிரிவு:
அசாம் vs உத்தரபிரதேசம்
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் உத்தரபிரதேசம் அணி இரண்டாவது இன்னிங்சில் 260 ரன் முன்னிலையில் இருக்கிறது.
கர்நாடகா vs டெல்லி:
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் கர்நாடக அணிக்கு எதிராக டெல்லி அணி 84 ஓவரில் 277 ரன் எடுத்து இருக்கிறது.
மகாராஷ்டிரா vs ரயில்வேஸ்:
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் ரயில்வேஸ் அணி 114 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன் அடித்துள்ளது.
B பிரிவு:
ஜார்கண்ட் vs ஜம்மு & காஷ்மீர்
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் பர்வேஸ் ரசூல் தலைமையிலான ஜம்மு & காஷ்மீர் அணி இரண்டாவது இன்னிங்சில் 330 ரன் முன்னிலையில் இருக்கிறார்கள்.
சவுராஷ்டிரா vs குஜராத்:
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 266 ரன் பின் தங்கி உள்ளார்கள்.
ஹரியானா vs ராஜஸ்தான்:
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் சொந்த மண்ணில் விளையாடும் ஹரியானா அணி 252 ரன் முன்னிலையில் இருக்கிறார்கள்.
C பிரிவு:
திரிபுரா vs ஆந்திரா:
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 17 ஓவர் விளையாடிய ஆந்திர பிரதேஷ் அணி 1 விக்கெட்டை இழந்து 51 ரன்னில் விளையாடி வருகிறது.
மும்பை vs பரோடா:
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் சொந்த மண்ணில் விளையாடும் மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸ் 29 ஓவருக்கு 102 ரன் அடித்திருக்கிறது.
ஒடிசா vs தமிழ்நாடு
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 244 ரன் பின் தங்கி இருக்கிறார்கள்.
D பிரிவு:
பெங்கால் vs விதர்பா:
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் பெங்கால் அணி 206 ரன் முன்னிலையில் உள்ளது.
ஹிமாச்சல் பிரதேஷ் vs சட்டிஸ்கர்:
மூன்றாவது நாளில் ஹிமாச்சல் பிரதேஷ் அணியை இன்னிங்ஸ் மற்றும் 144 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி சட்டிஸ்கர் அணி வெற்றி பெற்றது.
சர்வீசஸ் vs கோவா:
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் சர்வீசஸ் அணி 34 ஓவரில் 108 அடித்திருக்கிறது.