இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கை நீக்கியதும், தான் யாரென நிரூபிக்க ரஞ்சி கோப்பையில் விளையாட சென்றார். ஆனால், மொஹாலியில் நடந்த விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சொதப்பினார் பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ் சிங்.
முதல் இன்னிங்சில் விதர்பா அணி 505 ரன் சேர்த்தது, இதை துரத்திய பஞ்சாப் அணி யுவராஜ் சிங் 20 ரன் மட்டுமே அடிக்க 161 ரன்னுக்கு சுருண்டது. இதனால் பாலோ ஆன் செய்த பஞ்சாப் அணி மீண்டும் பேட்டிங்கில் சொதப்பினார்கள். 200 ரன்னுக்கே 6 விக்கெட் பறிகொடுத்து பரிதாப நிலையில் இருந்தார்கள். அப்பொழுது ஆறு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர் அடித்த யுவராஜ் தொடர்ந்து நீடிக்கவில்லை. இதனால் இரண்டாவது இன்னிங்சில் 42 ரன்னில் அவர் அவுட் ஆனார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடிய யுவராஜ் சிங், பேட்டிங்கில் சொதப்பியதால் அணியை விட்டு நீக்கினார்கள். அதன் பிறகு முதல் உள்ளூர் போட்டியில் விளையாடுகிறார் யுவராஜ் சிங்.
உலகக்கோப்பை நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். பல நாள் கழித்து மீண்டும் அணியில் இடம் பிடித்த யுவராஜ், இங்கிலாந்துடன் விளையாடிய 2வது ஒருநாள் போட்டியில் 150 ரன் அடித்து அசத்தினார். ஆனால், அந்த பார்மை அவர் தக்கவைத்து கொள்ள வில்லை. சாம்பியன்ஸ் டிராபியில் 105 ரன் மட்டுமே அடித்த யுவராஜ், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒரே இன்னிங்சில் கூட 40 ரன் அடிக்கவில்லை. இதனால், அவரை அணியில் விட்டு தூக்கினார்கள்.
நடுவரிசையில் கேதார் ஜாதவ் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோரை தொடர்ந்து விளையாட வைப்பதால், மீண்டும் அணியில் பிடிப்பது யுவ்ராஜ்க்கு கடினம். இந்த ரஞ்சி கோப்பையில் பேட்டிங்கில் விளாசினால் தான் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும், இல்லையெனில் அவர் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவது கடினம்.