ரஞ்சி டிராபி 2017-18: சிறப்பாக செயல்படும் நட்சத்திர வீரர்கள்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் மனிஷ் பாண்டே, தற்போது நடந்து வரும் ரஞ்சி டிராபி தொடரில் உத்தரபிரதேசம் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்து, இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு ஒரு சிக்னல் கொடுத்தார். தென்னாபிரிக்காவில் ஜூனியர் இந்திய அணிக்காக சிறப்பாக செயல் பட்டதை தொடர்ந்து, மீண்டும் அவரை இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மனிஷ் பாண்டேவை சேர்த்தார்கள். ஆனால், பல வாய்ப்புகள் கொடுத்ததும் அந்த இடத்தை அவர் தக்கவைத்து கொள்ளவில்லை.

இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் திணறி வந்ததால், இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர்களில் மனிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். ஆனால், அந்த வாய்ப்பை மனிஷ் பாண்டே தவறவிட்டார். இதனால், நியூஸிலாந்து தொடரில் அவர் ஒரே போட்டியில் கூட விளையாடவில்லை. ஆனால், மீண்டும் ரஞ்சி டிராபியில் கர்நாடக அணிக்காக இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

28 வயதான மனிஷ் பாண்டே உத்தரபிரதேச அணிக்கு எதிராக 231 அடித்திருந்தார், அதில் 29பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். தேகா நிஸ்ச்சலுடன் சேர்ந்து அந்த விக்கெட்டுக்கு 354 ரன் சேர்த்தார் மனிஷ் பாண்டே. மனிஷ் பாண்டே இரட்டை சதம் அடிக்க, அவருடன் விளையாடி கொண்டிருந்த தேகா நிஸ்சல் 195 ரன் அடித்தார். இவர்களின் உதவியால், கர்நாடக அணி 600 ரன்னை கடந்தது. இதே ரஞ்சி டிராபி சீசனில் மூன்றாவது முறையாக கர்நாடக அணி 600 ரன்னுக்கு மேல் அடிக்கிறது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 218 ரன் அடித்திருந்த மனிஷ் பாண்டே, அத்துடன் அதிகமாக அடித்து 238 ரன்னில் அவுட் ஆனார்.

இந்த ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட இன்னொரு இந்திய அணியின் நட்சத்திர வீரர் யார் என்றால், இஷாந்த் ஷர்மா தான். மகாராஷ்டிரா அணிக்கு எதிராக விளையாடி கொண்டிருக்கும் டெல்லி அணியின் அணியின் கேப்டன் இஷாந்த் சர்மா 14 ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்து அசத்தினார். இதனால், நேற்றைய ஆட்டநேர முடிவில் மகாராஷ்டிரா அணி 59/8 ரன்னில் திணறி வர, 360 ரன் பின் தங்கியுள்ளது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.