அவுட் என தெரிந்தும் மைதானத்தை விட்டு வெளியேறாத புஜாரா; கழுவி ஊற்றும் ரசிகர்கள் !!

அவுட் என தெரிந்தும் மைதானத்தை விட்டு வெளியேறாத புஜாரா; கழுவி ஊற்றும் ரசிகர்கள்

ரஞ்சி டிராபி அரையிறுதிப் போட்டியில் தான் அவுட் என தெரிந்தும் புஜாரா மைதானத்தை விட்டு வெளியேற மறுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

மாநில அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி உள்ளூர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் நடைபெற்று வரும் 2-வது அரையிறுதிப் போட்டியில், கர்நாடக அணியும், சவுராஷ்டிரா அணியும் விளையாடின.

முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி, 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா அணியில் 4-வது வீரராக புஜாரா களமிறங்கினார். புஜாரா ஒரு ரன் எடுத்திருந்தபோது, எதிரணியின் வேகப்பந்து வீச்சாளர் மிதுன் வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார்.

 

புஜாரா அவுட்டான சந்தோஷத்தில் கர்நாடக வீரர்கள் துள்ளி குதித்தனர். ஆனால், அம்பயர் அவுட் வழங்கவில்லை. டிவி ரீப்ளேயில் புஜாரா அவுட் என்பது தெளிவாகத் தெரிந்தது. தான் அவுட் எனத் தெரிந்தும் அவர் மைதானத்தை விட்டு வெளியேறவில்லை.

சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்களுடன் புஜாராவின் செயலை ஒப்பிட்டு ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தான் அவுட் என தெரிந்தால், அம்பயர் முடிவுக்கு காத்திருக்காமல் சச்சின் உடனே மைதானத்தை விட்டு வெளியேறிவிடுவார். புஜாரா அப்படி இல்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான், ஆஸ்திரேலிய வீரர்கள் புஜாராவிடம் இருந்து சிறப்பாக விளையாட கற்று கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் ஹைடன் பெருமையாக கூறி இருந்த நிலையில், புஜாரா இப்படி செய்திருப்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் வெறுப்படைய வைத்துள்ளது.

புஜாரா குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹைடன் பேசியதாவது;

புஜாரா பேட்டிங் ஆடும் விதத்தை நான் மிகவும் ரசிக்கிறேன். புஜாரா அருமையாக ஆடுகிறார். இவர் ஆடும் மாதிரியான ஆட்டம், ஆலன் பார்டர் காலத்துடன் ஆஸ்திரேலியாவில் நிறவடைந்துவிட்டது. எங்கள் காலத்து வீரர்கள் தடுப்பாட்டம் ஆடுவார்கள் என்றாலும் பெரும்பாலும் அட்டாக் செய்தே ஆடுவார்கள் என்று தெரிவித்த ஹைடன், தற்போதைய ஆஸ்திரேலிய வீரர்கள் புஜாராவிடமிருந்து தடுப்பாட்டத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Mohamed:

This website uses cookies.