பேட்டிங்கில் இருந்து பாதியிலேயே வெளியேறிய புஜாரா; காரணம் என்ன தெரியுமா..?
ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் களம் இறங்கிய புஜாரா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.
ரஞ்சி கோப்பை இறுதி போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. பெங்கால் அணிக்கெதிராக டாஸ் வென்ற சவுராஷ்டிரா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தேசாய், விக்கெட் கீப்பர் பேரோட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தேசாய் 38 ரன்னிலும், பேரோட் 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜடேஜா 54 ரன்னில் வெளியேறினார்.
நட்சத்திர வீரரான புஜாரா 6-வது வீரராக களம் இறங்கினார். ஆனால் ஐந்து ரன்கள் எடுத்த நிலையில் உடல்நலக்குறைவால் வெளியேறினார். சவுராஷ்டிரா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. வசவாதா 29 ரன்களுடன் களத்தில் உள்ளார். பெங்கால் அணி சார்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட் வீழ்த்தினார்.