ரஞ்சிக்கோப்பை தொடருக்கும் வருகிறது இந்த சர்ச்சை விதிமுறை!! பிசிசிஐ கெடுபிடி

ரஞ்சி கோப்பை தொடரில் அடுத்த ஆண்டிலிருந்து டிஆர்எஸ் முறை புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள மாநில கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடத்தப்படும் பிரபல தொடர்களில் ஒன்றான ரஞ்சிக் கோப்பை டெஸ்ட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது அம்சங்களும் நடைபெறுகிறது. அதேபோல் இந்த ஆண்டும் புதிய விதிமுறையுடன் நடக்கவிருக்கிறது.

அதாவது எல்பிடபிள்யூ வில் களநடுவர் முடிவை ஏற்றுக்கொள்ளமுடியாமல். அதற்க்கு எதிராக கேட்கப்படும் டிஆர்எஸ் முறை முதல் முறையாக ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரில் அடுத்து ஆண்டு சீசனில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த டிஆர்எஸ் முறையானது லீக் சுற்றுகளில் நடைமுறைப்படுத்தப்படாது. மாறாக, நாக்-அவுட் சுற்றுகளில் மட்டுமே இந்த முறை நடைமுறையில் இருக்கும் என்ற சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் போட்டிகளில் மட்டுமே இந்த டிஆர்எஸ் முறை அமலில் இருக்கும்.

இந்த அறிவிப்பை பிசிசிஐ-இன் பொது மேலாளர் சபா கரீம்  இன்று வெளியிட்டார்.

திடீரென இந்த டிஆர்எஸ் முறையை ரஞ்சி கோப்பையில் அறிமுகப்படுத்தப்பட காரணம், கடந்த ஆண்டு ரஞ்சி சீசனிலும் கள நடுவர்கள் அளித்த முடிவு பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படும் இருக்கிறது.

அடுத்தடுத்த ஆண்டுகளின் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் லீக் போட்டிகளிலும், இந்த ஆண்டு வரும் வரவேற்பை பொறுத்து நடைமுறை படுத்தலாம் எனவும் தெரியவந்துள்ளது.

1934ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் ரஞ்சி கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் பட்டம் விதர்பா கிரிக்கெட் அணியிடம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக ரஞ்சிக்கோப்பையை 41 முறை மும்பை அணி வென்றிருக்கிறது.

Prabhu Soundar:

This website uses cookies.