ரசித் கான் ஹாட்-ட்ரிக், சி.பி.எல் சாதனை
ஆப்கானிஸ்தானின் இளம் வீரர் ரசித் கான் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று முன்தினம் ஜமைக்கா தலவாஸ் அணிக்கு எதிராக ஓரே ஓவரில் அடுத்தடுது 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சி.பி.எல் ன் முதல் ஹாட்-ட்ரிக் எடுத்த வீரர் என்ற பெருமைமை பெற்றார் ரசித் .
கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட்டில் முதன் முதலாக ஹாட்ரிக் எடுத்த வீரர் என்ற சாதனையை ஆப்கான் வீரர் ரஷீத் கான் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக நிகழ்த்தினார்.
இதனால் கடந்த முறை சிபிஎல் சாம்பியன் அணியான ஜமைக்கா தலவாஸ் அணி வெளியேற்றப்பட்டது.
தரவ்பா, பிரையான் லாரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கயானா அமேசான் வாரியர்ஸ் அணி முதலில் ஜமைக்கா அணியை பேட் செய்ய அழைத்தது.
சிம்மன்ஸ் 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 34 எடுக்க, லூயிஸ் 3 பவுண்டரிக்ளுடன் 10 பந்துகளில் 15 எடுத்த நிலையில் எம்ரிட் பவுன்சரில் வெளியேறினார்.
கேப்டன் சங்கக்காரா 38 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்,
இந்நிலையில்தான் ரஷீத் கான் ஹாட்ரிக் 20-25 கூடுதல் ரன்களை எடுக்க விடாமல் தடுத்ததோடு சங்கக்காராவுக்கு பார்ட்னர் இல்லாமல் செய்து விட்டது.
ரஷீத் கானின் ஹாட்ரிக் கூக்ளி
15-வது ஓவரில் ரஷீத் கான் முதலில் மெக்கார்த்தியை பவுல்டு செய்தார், டிரைவ் ஆட முயன்று ஏமாந்தார். ஜொனாதன் ஃபூ அடுத்த பந்தில், கூக்ளிக்கு லெக் ஸ்டம்பை இழந்தார்.
ரோவ்மன் போவெல் ஆஃப் ஸ்டம்புக்கு நன்றாக வெளியே வீசப்பட்ட பந்துக்கு ஆவலாதி போல் டிரைவ் ஆட முயற்சி செய்தார்,
பந்து கூக்ளியில் உள்திரும்பி ஆஃப் ஸ்டம்பைப் பதம் பார்த்தது.
ஆக மூன்றுமே பவுல்டு, மூன்றுமே கூக்ளி, சிபில் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஹாட்ரிக் எடுத்த வீரர் என்ற சாதனையை ரஷீத் கான் நிகழ்த்தினார்.
ஜமைக்கா அணி 20 ஓவர்களில் 168/8 என்று கட்டுப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் லூக் ரோங்கி 33 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 70 ரன்கள் விளாச 17.5 ஓவர்களில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.