ரசீத் கான் கிரிக்கெட் உலகிற்கு கிடைத்த சொத்து; இந்திய பிரதமர் மோடி புகழாரம் !!

ரசீத் கான் கிரிக்கெட் உலகிற்கு கிடைத்த சொத்து; இந்திய பிரதமர் மோடி புகழாரம்

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக திகழ்ந்து வரும் ரசீத் கான் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கே கிடைத்த சொத்து என்று இந்திய பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் பிரதமர் அசரப் கானி, கடந்த சில வாரங்களுக்கு முன், பந்துவீச்சாளர் ரஷித் கான், ஆப்கானிஸ்தான் நாட்டின் பெருமை என புகழ்ந்தார். மேலும், அவரை நாங்கள் விட்டுத் தரமாட்டோம் என மோடியை குறிப்பிட்டு ட்விட் செய்தார்.

இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடி மக்களுடன் ‘மனதின் குரல்’ என்ற வானொலி நிகழ்ச்சியின் மூலம் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், இன்றைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி இந்திய கிரிக்கெட் அணியைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது, “இந்தியா-ஆப்கானிஸ்தான் அணி இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் வீரர்களை அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தினர். சமூகத்தை இணைப்பதற்கும், இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்தவும் விளையாட்டு சிறந்த வழியாக உள்ளது,” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் கிரிக்கெட் உலகிற்கு கிடைத்த சொத்து எனவும் புகழ்ந்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.