2019ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடந்து முடிந்த முதல் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 14 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த டெஸ்ட் தொடரிலேயே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அசத்தினார். மேலும் தனது டெஸ்ட் கேரியரில் தரப்பில் இதுவரை அவர் 413 டெஸ்ட் விக்கெட்டுக்களை தன் கைவசம் வைத்துள்ளார். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் அவர் ஐசிசி டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியலில் இரண்டாவது பந்துவீச்சாளராக இடம் பெற்றுள்ளார்.
தற்பொழுது இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட அவர் தயாராகி வரும் நிலையில், தென்னாப்பிரிக்க முன்னாள் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தன்னுடைய முழு ஆதிக்கத்தை செலுத்துவார் என்று சமீபத்தில் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய ஆதிக்கத்தை காட்டுவார்
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவ்வளவு சிறப்பாக விளையாடும் அணிகள் கிடையாது. மறுபக்கம் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபகாலமாக மிக அற்புதமாக சுழற்பந்து வீச்சு ஆதிக்கம் செலுத்தி வருகிறார். எனவே இதன் அடிப்படையில் வைத்து பார்க்கையில் நடக்க இருக்கின்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ரவிச்சந்திரன் அஸ்வின் கட்டாயம் வழங்குவார்.
குறிப்பாக எவ்வளவு ஓவர்கள் வேண்டுமானாலும் வீசும் அளவுக்கு அவர் தற்பொழுது உடலளவில் தயாராகி உள்ளார். எனவே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிச்சயமாக இங்கிலாந்து அணி வீரர்களை ரவிச்சந்திரன் அஸ்வின் அச்சுறுத்துவார் என்றும், இந்திய அணிக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ரவிச்சந்திரன் அஸ்வின் வலம் வருவார் என்றும் டேல் ஸ்டெயின் கூறி முடித்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்
வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் லீக் போட்டிகள் இந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி முதல் தொடங்கும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே முதல் போட்டியில் முதல் மிக சிறப்பாக விளையாட வேண்டும் என்கிற மனப்பான்மை இந்த இரு அணிகளுக்கும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இந்திய அணி கைவிட்டது. அதேசமயம் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பினை இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்து அதன் மூலமாக இங்கிலாந்து அணி கைவிட்டது. எனவே இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றும் முனைப்போடு இந்த இரு அணிகளும் விளையாடும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.