சரியான வாய்ப்பு மட்டும் கிடைத்தால் போதும்… இந்திய அணியின் ரசீத் கான் இந்த பையன்; இளம் வீரரை பாராட்டி பேசிய சுரேஷ் ரெய்னா
ரஷீத் கான் போன்று இந்த பந்து வீச்சாளர் மிகப்பெரிய வீரராக உருவெடுப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஐபிஎல் தொடர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி லிமிடெட் ஓவர் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த இந்திய அணியின் இளம் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய், தான் பங்கேற்ற போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிர்கால இந்தியா அணியின் நட்சத்திர வீரராக வலம் வருவதற்கு அனைத்து தகுதியையும் பெற்றுள்ளார்.
குறிப்பாக நடைபெற்று முடிந்த 2022 ஆசிய கோப்பையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிக மோசமாக செயல்பட்ட நிலையிலும் இளம் வீரராக இருந்து இவர் பந்து வீசிய விதம் அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது.
ஆனால் அணியின் காம்பினேஷன் கருதி இவருக்கு உலகக் கோப்பை தொடர், மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு தொடர்களிலும் போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை.இருந்தபோதும் இவருடைய திறமையை கருத்தில் கொண்டுள்ள இந்திய அணி நிச்சயமாக இவரை எதிர்வரும் தொடர்களில் பயன்படுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, ஆப்கான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் போல் எதிர்கால இந்திய அணியில் ரவி பிஷ்னாய் ஜோலிப்பார் என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா பேசுகையில்,“உலகில் அனைத்து மிகப்பெரிய பந்துவீச்சாளர்களும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமே மிகப்பெரிய பந்துவீச்சாளர்களாக உருவாகியுள்ளனர். அதேபோல ரவி பிஷ்னாய்-இடம் இருக்கும் திறமை மற்றும் பண்பை வைத்து பார்த்தால் நிச்சயம் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் போன்று மிகப்பெரிய சுழற்பந்து வீச்சாளராக உருவெடுப்பார் என்று பேசியிருந்தார்.
அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற , ராபின் உத்த்பா,R.P. சிங்,மற்றும் பிரக்யான் ஓஜா போன்ற வீரர்கள் .,எதிர்கால இந்திய அணியில் அபிஷேக் சர்மா , பிரித்வி ஷா மற்றும் அர்ஷ்திப் சிங் போன்ற வீரர்கள் மிகப்பெரிய வீரர்களாக உருவெடுபார்கள் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.