ரவி சாஸ்திரிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு? பயிற்சியாளர் தேர்வுக்குழு உறுப்பினர் தகவல்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டன. உலக கோப்பை தொடர் முடிந்த சில வாரங்களிலேயே மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் துவங்க இருப்பதால், இவர்களின் பதவிக் காலத்தை மேலும் 45 நாட்களுக்கு பிசிசிஐ நீட்டித்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில் புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்தது. இந்த பதவிகளுக்கு வர விரும்புவோர்கள் விண்ணப்பங்கள் மூலம் தெரியப்படுத்தலாம் என்ற அறிக்கைகள் பிசிசிஐ அலுவலகத்தால் வெளியிடப்பட்டது. இதற்காக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், மகேளா ஜெயவர்தனே, வீரேந்திர சேவாக் ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர்.

பயிற்சியாளர்களை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையிலான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்த இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனுஷமான் கெய்க்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி இருவரும் நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசுகையில் புதிய பயிற்சியாளர்களின் தேர்வு குறித்து சில தகவல்களை வெளியிட்டனர்.

அதில் அனுஷுமன் கூறுகையில், “பயிற்சியாளர்களை தேர்வு செய்கையில், சின்ன விஷயங்களைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் கேப்டன் மற்றும் மற்ற வீரர்களுடன் பயிற்சியாளர் இணக்கமாக செல்ல வேண்டும்.

தற்போது பதவியில் இருக்கும் ரவி சாஸ்திரி அதை சிறப்பாகத் தான் செய்து வருகிறார். ஆதலால், பேட்டிங், பீல்டிங் உட்பட மற்ற பயிற்சியாளர்களை மட்டும் தேர்வு செய்யலாம் என்பது எனது கருத்து” என்றார்.

“மேலும், விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பமும் பரிசீலிக்கப்பட்டு அவர்கள் அளிக்கும் சான்றிதழ் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும்.

பிசிசிஐ நிர்வாகக் குழு அனுமதித்தால், இந்திய அணியின் ஒரு சில வீரர்களுடன் ஆலோசித்து, அவர்கள் கருத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அதற்க்கு அனுமதி மறுக்கப்பட்டால், அனுபவ வீரர்களில் கருத்துக்கள் கேட்கப்படும்” என்றவாறு தெரிவித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.