இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக இருந்த இந்த பெரும் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை தொடரில் செமி பைனலில் தோல்வி அடைந்து வெளியே வந்த பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்ற வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் கூக்குரல் எழுந்து வந்தது.
இந்நிலையில் அந்த நேரத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட வேண்டி இருந்தது. இதன் காரணமாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் அவரது துணை குழுவிற்கு 45 நாட்கள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் கபில் தேவ் மற்றும் முன்னாள் வீரர்கள் இருவர் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு இந்திய அணியின் பயிற்சியாளர் களுக்கான தேடுதலை நடத்தும் என்று அறிவித்தது. மேலும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இடம் நேர்காணல் நடத்துவதும் அவர்களின் வேலையை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், துணை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர் என பல வேலைகளுக்கு சுமார் உலகம் உலகம் முழுவதும் இருந்து சுமார் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தது. இவற்றையெல்லாம் சலித்து வைத்துவிட்டு பார்த்தபோது இறுதியாக அந்த மூன்று பேர் கொண்ட குழு 6 பேரை தேர்வு செய்தது.
பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் ரவி சாஸ்திரி, ராபின் சிங், லால் சந்த் ராஜ்பூட் (இந்தியா), டாம் மூடி (ஆஸ்திரேலியா), மைக் ஹெஸ்சன் (நியூசிலாந்து), பில் சிம்மன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகிய 6 பேர் கொண்ட இறுதி பட்டியலை வெளியிட்டது.
தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகிய 6 பேர் கொண்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இவர்களுக்கான நேர்காணல் இன்று மும்பை பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நேர்காணல் முடிந்து ஏழு மணிக்கு தலைமை பயிற்சியாளர் அறிவிக்கப்படுவார். என்று தெரிவிக்கப்பட்டிருந்தது முன்கூட்டி ஆகவே ரவி சாஸ்திரி தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் செயல்படுவார்
ரவி சாஸ்திரியின் தலைமையில் இந்திய அணி 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வென்று 7 போட்டிகளில் தோற்று. உள்ளது மீதமுள்ள மூன்று போட்டிகளில் டிரா செய்துள்ளது. ஒருநாள் போட்டிகளை பொருத்தமட்டில் 63 போட்டிகளில் இந்திய அணி விளையாடி 45 போட்டிகளில் வென்று 15 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. டி20 பொருத்தமட்டில் 37 போட்டிகளில் விளையாடி 25 போட்டிகளில் வெற்றியும் 11 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. .