ஆஸ்திரேலிய தொடருக்கு ரோகித்சர்மா ஏன் சேர்க்கப்படவில்லை? பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொன்ன புதிய தகவல்?

ஆஸ்திரேலிய தொடருக்கு ரோகித்சர்மா ஏன் சேர்க்கப்படவில்லை? பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொன்ன புதிய தகவல்?

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது ஆஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை மிக நீண்ட தொடரில் விளையாட உள்ளது 4 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என இந்த தொடர் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக நடக்க இருக்கிறது இதற்கான ஏற்பாடுகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்போது லிருந்து செய்து வருகிறது.

மேலும் இந்த தொடருக்கான இந்திய அணி யும் கடந்த வாரம் அறிவிக்கப் பட்டது டெஸ்ட் ஒருநாள் டி20 என மூன்றுவிதமான தோழர்களுக்கும் தனித்தனியாக அணி அறிவிக்கப்பட்டது விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு சில வீரர்கள் மட்டுமே மூன்று விதமான அணிகளும் இடம் பெற்றிருந்தனர். தங்கராசு நடராஜன் வரும் சக்கரவர்த்தி வாஷிங்டன் சுந்தர் போன்ற தமிழக வீரர்களும் இந்த அணியில் இடம் பிடித்திருக்கின்றனர்

ஆனால் இந்திய அணிக்காக கடந்த சில வருடங்களாக மிகச் சிறந்த துவக்க வீரராக இருக்கும் ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஷாக் ஆன ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர் ரோகித் சர்மா ஏன் அணியில் எடுக்கப்படவில்லை? என்ற முக்கியமான கேள்வி தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியதாவது ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த காயம் அதிகமாகி விடக்கூடாது என்று கண்காணித்து வருகிறோம் மேலும் பிசிசிஐ மருத்துவக் குழுவும் அவரை கண்காணித்து கொண்டிருக்கிறது. அதன் பின்னர் அவரது மருத்துவ அறிக்கையை தேர்வு குழுவினருக்கு  அனுப்பப்படும் இதனை வைத்து தேர்வுக் குழுவினர் முடிவு செய்வார்கள். இதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் தற்போதைக்கு விளையாடாமல் இருப்பதே சரியானதாகும் ஏனெனில் காயம் அடைந்து விடக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார் ரவி சாஸ்திரி.

Prabhu Soundar:

This website uses cookies.