உலக கோப்பையில் இருந்து கேதர் ஜாதவ் நீக்கம்?? – பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அப்டேட்

ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பையில் கேதர் ஜாதவ் ஆடுவாரா? மாட்டாரா ? என அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்மையில், ஐபிஎல் தொடரின் இறுதி கட்ட லீக் போட்டியின்போது பஞ்சாப் அணிக்கு எதிரான சென்னை அணி மோதிய போட்டியில் கேதர் ஜாதவ் பவுண்டரிக்கு சென்ற பந்தை பிடிக்க முயற்சித்த போது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக போட்டியில் நடுவில் வெளியேறினார். அதன் பிறகு, இதற்கு மேல் அவர் ஐபிஎல் தொடரில் தொடர மாட்டார் என அணியின் மருத்துவர் தெரிவித்திருந்தார். அதேபோலவே, பிளே ஆப் சுற்றிலும் கேதர் ஜாதவ் கலந்து கொள்ளவில்லை.

(Photo Source: AP Photos)

உலகக்கோப்பை துவங்க இன்னும் ஓரிரு வாரங்களே இருக்கும் நிலையில், தோள்பட்டையில் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளதால், அதற்குள் கேதர் ஜாதவ் குணம் அடைய மாட்டார் என்ற செய்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. மேலும் அவருக்கு பதிலாக உலகக்கோப்பையில் யார் ஆடுவார்? என்று விவாதம் முதற்கொண்டு எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார்.

கேதர் ஜாதவிற்க்கு தோள்பட்டையில் கடுமையாக அடிபட்டது உண்மைதான். ஆனால், அதிர்ஷ்டவசமாக எலும்பு முறிவு எதுவும் ஏற்படாத காரணத்தினால் அவர் விரைவில் குணமடைவார் என்றும், உலக கோப்பை அணியில் தொடர்ந்து இடம் பெறுவார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மாற்று வீரர்கள் பற்றி தற்போது யோசிக்க எந்தவித அவசியம் இல்லை. அப்படி எதுவும் இருந்தால், தேர்வுக்குழு முடிவு செய்து கொள்ளும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அதேபோல், உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு முதல் போட்டியான ஜூன் 5ம் தேதி நடக்க இருக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்கும். அதனடிப்படையில், பிளேயிங் லெவென் முடிவு செய்யப்படும் எனவும் ரவி சாஸ்திரி கூறினார்.

Prabhu Soundar:

This website uses cookies.