நான் சொன்னது அவருக்கு வலிச்சா, வலிச்சுட்டு போகட்டும்; அஸ்வின் மீது ரவி சாஸ்திரி காட்டம்!!

தன்னை ரவிசாஸ்திரி கூறிய வார்த்தைகள் காயப்படுத்தியது எனக்கூறிய அஸ்வினுக்கு, தனது பேட்டியின் மூலம் ரவிசாஸ்திரி பதிலளித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். அப்போது பேசிய தலைமை பயிற்சியாளர் ரவிசஸ்திரி, ‘வெளிநாட்டு மைதானங்களில் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் இருக்கிறார்’ எனக்கூறி அஸ்வினை நேரடியாக குத்திகாண்பிப்பது போல பேசினார்.

இந்த சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், “ரவிசாஸ்திரி மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். மரியாதையும் கொண்டிருந்தேன். ஆனால் அவர் இப்படி இரண்டாம்தர விமர்சனத்தையும் முன் வைப்பார் என்று எதிர் பார்க்கவில்லை. அது என்னை மிகவும் பாதித்தது. இதுகுறித்து என் மனைவியிடம் மிகவும் வருத்தை பகிர்ந்துகொண்டேன்.” என்றார்.

அஸ்வினின் இந்த பேட்டிக்கு பிறகு பதிலளித்துள்ள ரவிசாஸ்திரி கூறுகையில், “அஸ்வின் அதற்கு முன்னர் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. ஆகையால் சிட்னி போட்டியில் குல்தீப் யாதவ் உள்ளே எடுத்து வரப்பட்டார்  அப்போது அவர் மிகச் சிறப்பாக விளையாடினார். ஆகையால் அவரைப் பாராட்டினேன். அஸ்வினை உள்ள எடுக்காதது அவருக்கு வருத்தத்தை கொடுக்கலாம். ஆனால் அதற்காக அவர் வருத்தப்பட்டு அழுவது எந்தவகையில் சரியாக இருக்கும். அதை சவாலாக எடுத்துக் கொண்டு தன்னை நிரூபித்துக் காட்டுவதே சரியாக இருக்கும். தவறு செய்ததற்காக தடவிக் கொடுப்பது சரியாக இருக்காது. அதனை நேரடியாக சுட்டிக்காட்டி சரி செய்ய உதவ வேண்டும். அப்படி தன் நான் செய்தேன்.” என்றார்.

“வீரர்கள் செய்யும் தவறை அப்போது சுட்டிக்காட்ட வேண்டும். எந்த ஒரு முன் விரோதத்தையும் மனதில் வைத்துக் கொள்ளாமல், வீரர்களின் வளர்ச்சிக்காகவே தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தபோது நான் செயல்பட்டு வந்தேன். இதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாமல் அணியின் வெற்றிக்கு எது தேவையோ, அதற்கான முடிவை எடுத்தேன். அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.” என்றார்.

அந்த சம்பவத்திற்கு பிறகு துவண்டுவிடாத அஸ்வின் தற்போது வரை மிகச் சிறப்பாக பந்துவீசி முன்னணி சுழல் பந்துவீச்சாளராக 400+ விக்கெடுகளை டெஸ்ட் போட்டிகளில் எடுத்திருக்கிறார். அந்த தொடருக்குப் பிறகு குல்தீப் யாதவ் டெஸ்ட் அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.