தன் வாயாலயே ஆப்புவச்சிக்கிட்ட அஸ்வின்… வச்சு செஞ்ச ஐபிஎல் நிர்வாகம் – கண்டித்து அபராதம் விதிப்பு!

பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் முடிவுகளை பற்றி பொதுவெளியில் பேசி கருத்து தெரிவித்ததற்காக ரவிச்சந்திரன் அஸ்வின் பிசிசிஐ-யின் கண்டனத்திற்கு ஆளாகியதோடு அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் நடுவர் எடுத்த முடிவிற்கு கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதனால் போட்டியிலிருந்து 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதல்தர குற்றம் என்று பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.

முதல்தரம் என்பது வார்னிங் ஆகும். மேலும் இரண்டு முறை இதுபோன்ற செயல் நீடித்தால் சில ஐபிஎல் போட்டிகள் விளையாட தடையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் விதிமுறைப்படி, நடுவர் மற்றும் அவர் எடுத்த முடிவுகள் குறித்த கருத்துக்களை பொதுவெளியில் எவரும் பேசக்கூடாது. இதை ரவிச்சந்திரன் அஸ்வின் மீறியதால் பிரிவு 2.7 இன் கீழ் இத்தகைய நடவடிக்கை அஸ்வின் மீது எடுக்கப்பட்டிருப்பதாக ஐபிஎல் மற்றும் பிசிசிஐ தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது.

சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியில், ராஜஸ்தான் அணி பந்துவீசிக் கொண்டிருக்கையில், மைதானத்தில் அதிக அளவில் ஈரப்பதம் இருந்தது. அப்போது பந்தின் தன்மை மாறிவிட்டது என்றுக்கூறி, நடுவர் போட்டியில் நடுவே தானாகவே வேறொரு பந்தை மாற்றிக் கொடுத்தார். இது ரவிச்சந்திரன் அஸ்வினை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

நடுவரின் இந்த செயல் குறித்து போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில், அஸ்வின் சில கருத்துக்களை தெரிவித்தார். அஸ்வின் பேசியதாவது:

“பந்தின் தன்மை ஈரப்பதத்தினால் மாறிவிட்டது என்றுக்கூறி நடுவர் அவராகவே வேறொரு பந்தை எங்களுக்கு மாற்றிக்கொடுத்தது முற்றிலும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இதற்கு முன்னால் இது போன்று நடந்ததில்லை. இந்த வருட ஐபிஎல்-இல் நடக்கும் பல செயல்கள் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.”

“நாங்கள் பந்தை மாற்ற வேண்டும் என்று கேட்கவில்லையே என்று, பந்துவீச்சு அணி என்கிற முறையில் நடுவரிடம் பேசினேன். அதற்கு அவர், நடுவர்கள் பந்தை மாற்றிக்கொள்ள விரும்பினால் அவர்களாகவே முடிவெடுத்து மாற்றலாம் என்று கூறினார்.”

ஈரப்பதம் காரணமாக பந்தை மாற்றிக்கொள்ளலாம் என்றால், ஒவ்வொரு ஓவரிலும் ஈரப்பதத்தை காரணம் காட்டி மாற்றிக் கொள்ள முடியுமா? எப்போது என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பது சரியான முறையல்ல. ஐபிஎல் தரம் குறையாமல் நடந்து கொள்ள வேண்டும்.” என்றார்.

நடுவரின் முடிவைப் பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் இவ்வாறாக கமெண்ட் செய்ததால், விதிமுறைப்படி பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்து, வார்னிங் கொடுத்திருக்கிறது.

Mohamed:

This website uses cookies.